Main Menu

கட்டுப்பாட்டுடன் பெருநாளைக்கொண்டாடுவோம் – பெருநாள் வாழ்த்துச்செய்தியில் பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி

இந்த செய்தியைப் பகிர்க >>>

கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மக்களைப்பாதுகாக்கும் நோக்கத்தோடு அரசு கட்டுப்பாடுகளையும் விதி முறைகளையும் விதித்துள்ளது. அதனை கவனத்திற்கொண்டு கட்டுப்பாட்டுடனும் பொறுமையுடனும் அமைதியான முறையிலும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோம் என கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாடு கொரோனா நோயினால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் ஏனைய மத பெருநாட்கள் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. நாமும் காலச்சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அமையுடனும் கட்டுப்பாட்டுடனும் பெருநாளைக் கொண்டாடும் அதே வேளை, முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவிகளையும் செய்து கொரோனாவிலிருந்து மக்களைக்காக்கும் போராட்டத்தில் இணைந்துள்ள பாதுகாப்புத்தரப்பினர், சுகாதாரத்துறையினர், மற்றும் அரச ஊழியர்கள் அனைவருக்காகவும் இப்புனித நாளில் பிரார்த்திப்போம்.

அத்தோடு, நம் வீடுகளுக்குள் நமது மார்க்கக் கடமைகளை மேற்கொள்ள வேண்டிய இக்கடடான சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமது பிள்ளைகளுக்கு மார்க்கக்கல்வியை புகட்ட வேண்டிய அவசியத்தேவை உள்ளதை அனைவரும் கவனத்திற்கொண்டு செயற்படுவோமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed