பிறைந்துரைச்சேனை முஹம்மது ஜவ்பர் குவைத்தில் வபாத்
இந்த செய்தியைப் பகிர்க >>>
குவைத்திலுள்ள Alghanim Automotive Group, Fahaheel Service Devision இல் நீண்ட காலமாக கடமை புரிந்து வந்த வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, அஸ்ஹர் வித்தியாலய வீதியைப் பிறப்பிடமாகவும் தோப்பூரில் திருமணம் முடித்திருந்த முஹம்மது ஜவ்பர் (சீனியரின் மகன்) கடந்த 23.05.2020ம் திகதி சனிக்கிழமை கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
மரணமடைந்த சகோதரர் முஹம்மது ஜவ்பரின் ஜனாஸா நேற்று 25.05.2020ம் திகதி திங்கட்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர் மர்ஹூம் அஷ்ரப்பின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல், தொடர்புகளுக்கு லக்ஸரி கார்கோ பாறூக் 99520013
இந்த செய்தியைப் பகிர்க >>>
Comments are Closed