Main Menu

பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட Ehteraz

இந்த செய்தியைப் பகிர்க >>>

கொரோனா தொற்று தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் கொரோனாவிலிருந்து தனிப்பட்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அடங்கியதாக கத்தார் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட Ehteraz செயலி புதுப்பிக்கப்பட்டு Apple, Andriod ல் கிடைக்கின்றது. இது தற்போது மேன்படுத்தப்பட்ட வலுவான பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்களைக் கொண்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பாதிப்பு கடந்த மே 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் பாவனைக்கு வந்துள்ளதுடன், அதனை கத்தாரிலுள்ள சகலரும் மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, முன்னர் தமது தொலைபேசிகளில் நிறுவியுள்ளவர்களுக்கு அது தொடர்பாக குறுந்தகவல் மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு தெரிவிக்கையில், எம்மால் வெளியிடப்பட்ட பழைய பதிப்பிலுள்ள குறைகள் பாவனையாளர்களால் முன் வைக்கப்பட்ட முறைப்பாடுகள், முன்மொழிவுகளை கவனத்திற் கொள்ளப்பட்டு, சரி செய்யப்பட்டு Ehteraz மேம்பட்ட பதிப்பாக வெளியிட்டுள்ளோம்.

இது மேலதிகத்தகவல்களை உள்ளடக்கியுள்ளதுடன், “COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் Ehteraz செயலி முக்கிய அங்கமாகும். அத்துடன், மேலும் இதனை நடைமுறைப்பாவனையில் கொண்டு வந்துள்ள கத்தார் குடிமக்களுக்கும் ஏனைய குடியிருப்பாளர்ககளின் ஒத்துழைப்புக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

குறித்த செயலியில் பச்சை, மஞ்சள், சாம்பல், சிகப்பு ஆகிய நான்கு நிற வர்ணங்கள் உள்ளத்துடன், ஒருவர் தனது தொலைபேசியிலோ வேறு சாதனங்களிலோ நிறுவியுள்ள Ehteraz செயலியை திறக்கின்ற போது, அது காட்டப்பட்டுள்ள வர்ணங்கள் உங்கள் ஆரோக்கியம், உடல்நிலை தொடர்பிலான தகவல்களைக் குறிக்கின்றது.

பச்சை நிறத்தில் இருக்குமாயின், நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பதாகவும், மஞ்சள் நிறம் காட்டுமாயின் தனிமைப்படுத்துதல், சாம்பல் நிறம் சந்தேகத்திற்குரியது, சிகப்பு நிறம் காட்டுமாயின், கொரோனா தொற்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டதாகவும் காண்பிக்கும்.

அத்துடன், தினசரி கொரோனாவின் பாதிப்பு தொடர்பிலான தரவுகளை உடனுக்குடன் பதிவேற்றமும் செயற்பாடும் இதனூடாக இடம்பெறுகின்றது. அத்தோடு, தொழிநுட்ப உதவி போன்றவற்றுக்கு அவசர தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன், உடனுக்குடன் தரவேற்றம் தொடர்பாக குறுந்தகவல் மூலம் அறிவிப்பும் விடுக்கப்படுகிறது.

அத்தோடு, குறித்த செயலி தொடர்பான விபரங்கள் அடங்கிய தொகுப்பும் இத்துடன் இணைக்கப்பட்டு சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சகலரும் பயன்படுத்தும் வகையில் அறபு, ஆங்கில மொழிகளில் உள்ளமை சிறப்பம்சமாகும்.
thehotline

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed