Main Menu

வாகனேரி சம்பவத்திற்கு சுமூகத்தீர்வு காணும் முயற்சியில் சட்டத்தரணி ஹபீப் றிபான்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எம்.ரீ. ஹைதர் அலி
நேற்றைய தினம் ஒரு சில புரிதல்களில் இடம்பெற்ற குறைபாடுகள் காரணமாக வாகனேரிப் பிரதேசத்தில் முஸ்லிம், தமிழ் சகோதரர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில கடும்போக்குவாதிகள் இதனை இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு முன்னெடுப்புக்களைச்செய்து வருகின்றனர்.

இச்சூழ்நிலையில், இப்பிரச்சினை தொடர்பில் விசாரித்து இரு தரப்பையும் சந்தித்துப்பேசி ஒரு சமாதான நிலையினை உருவாக்கும் நோக்கத்தோடு, முதற்கட்டமாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கிரூபா, குளத்துமடு கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் பார்த்திபன், வாகனேரி கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் காசினாதன் மற்றும் வாகனேரி கிராம அபிவிருத்திச்சங்க செயலாளர் ஓவியராஜா ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

சந்திப்பின் போது, இது இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை இதனை இனவாத சக்திகள் ஒரு இன ரீதியான பிரச்சினையாக மாற்றுவதற்கு வடிவமைக்கிறார்கள். நாமனைவரும் தெளிவாக நடந்து கொள்ள வேண்டுமென்று அங்குள்ள மக்களிடம் வேண்டிக்கொண்டார்.

மேலும், அம்மக்கள் குறித்த இப்பிரச்சினை இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்டதென்றும், இதனை இனப்பிரச்சினையாக காட்ட முற்படமாட்டோமென்றும் தெளிவாகக் கூறியிருந்ததாகவும் தெரிவித்தார்.

சட்டத்தரணி ஹபீப் றிபான்,
வேட்பாளர்,
பாராளுமன்ற தேர்தல்,
ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed