Main Menu

வாகனேரிப் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தினை இனப்பிரச்சினையாக மாற்ற முயற்சி -சட்டத்தரணி ஹபீப் றிபான் எஸ்.எம்.எம்.முர்ஷித் வாகனேரிப் பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற சம்பவத்தினை இனப்பிரச்சினையாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்றத்தேர்தல் வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு சில புரிதல்களில் இடம்பெற்ற குறைபாடுகள் காரணமாக வாகனேரிப் பிரதேசத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் சகோதரர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில கடும்போக்குவாதிகள் இதனை அறிந்து இதனை ஒரு இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு முன்னெடுப்புக்களைச் செய்து வருகின்றனர். இச்சூழ்நிலையில், இந்தப்பிரச்சினை தொடர்பாக விசாரித்து இரு தரப்பையும் சந்தித்துப்பேசி ஒரு சமாதான நிலையினை உருவாக்கும் நோக்கத்தோடு முதற்கட்டமாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கிருபா, குளத்துமடு கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் எஸ்.பார்த்திபன், வாகனேரி கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் எஸ்.காசினாதன் மற்றும் வாகனேரி கிராம அபிவிருத்திச்சங்க செயலாளர் எஸ்.ஓவியராஜா ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரைச்சந்தித்து கலந்துரையாடினேன். சந்திப்பின் போது, இது இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை. இதனை இனவாத சக்திகள் ஒரு இன ரீதியான பிரச்சினையாக மாற்றுவதற்கு வடிவமைக்கிறார்கள். நாமனைவரும் தெளிவாக நடந்து கொள்ள வேண்டுமென்று அங்குள்ள மக்களிடம் வேண்டிக்கொண்டேன். மேலும், அம்மக்கள் குறித்த இப்பிரச்சினை இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்டதென்றும், இதனை இனப்பிரச்சினையாகக்காட்ட முற்படமாட்டோமென்றும் தெளிவாகக் கூறியிருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாகனேரிப் பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற சம்பவத்தினை இனப்பிரச்சினையாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்றத்தேர்தல் வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு சில புரிதல்களில் இடம்பெற்ற குறைபாடுகள் காரணமாக வாகனேரிப் பிரதேசத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் சகோதரர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில கடும்போக்குவாதிகள் இதனை அறிந்து இதனை ஒரு இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு முன்னெடுப்புக்களைச் செய்து வருகின்றனர்.

இச்சூழ்நிலையில், இந்தப்பிரச்சினை தொடர்பாக விசாரித்து இரு தரப்பையும் சந்தித்துப்பேசி ஒரு சமாதான நிலையினை உருவாக்கும் நோக்கத்தோடு முதற்கட்டமாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கிருபா, குளத்துமடு கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் எஸ்.பார்த்திபன், வாகனேரி கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் எஸ்.காசினாதன் மற்றும் வாகனேரி கிராம அபிவிருத்திச்சங்க செயலாளர் எஸ்.ஓவியராஜா ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரைச்சந்தித்து கலந்துரையாடினேன்.

சந்திப்பின் போது, இது இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை. இதனை இனவாத சக்திகள் ஒரு இன ரீதியான பிரச்சினையாக மாற்றுவதற்கு வடிவமைக்கிறார்கள். நாமனைவரும் தெளிவாக நடந்து கொள்ள வேண்டுமென்று அங்குள்ள மக்களிடம் வேண்டிக்கொண்டேன்.

மேலும், அம்மக்கள் குறித்த இப்பிரச்சினை இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்டதென்றும், இதனை இனப்பிரச்சினையாகக்காட்ட முற்படமாட்டோமென்றும் தெளிவாகக் கூறியிருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed