Main Menu

குவைத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் : மற்றுமோர் இந்தியர் தற்கொலை – அரப் டைம்ஸ்

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஏ.எல்.நாஸர்
கொரோனா வைரஸ் பீதியினாலும் லோக்டவுன் நிலைபாட்டாலும் மன அழுத்தங்கள் அதிகரித்தமையால் தொடர்ந்தும் தற்கொலை செய்திகள் அதிகமாக நடக்கின்றது. குவைத்தில் ஒரு வாரத்தில் இது மூன்றாவது தற்கொலை செய்தி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பதாக பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த ஒருவர் பர்வானியா பகுதியில் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார். அதற்கடுத்து சபாஹ் அல் நாஸர் பகுதியில் இலங்கையைச்சேர்ந்த ஒருவரும் கழுத்தில் கயிரை மாட்டி உயிரை மாய்த்துக்கொண்டதாக அதே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

தமக்கு வரக்கூடிய பிரச்சினைகள், துன்ப, துயரங்கள் யாவுமே இறைவன் புறத்திலிருந்து வரக்கூடிய ஒரு சோதனை என்று எதிர்கொண்டு வாழ்வதால் மட்டுமே இவ்வாறான மோசமான நிலைகளைக்கடந்து செல்லலாம். இஸ்லாமிய அடைப்படை கொள்கையில் ஒன்று விதியை நம்பவது அவ்வாறான நம்பிக்கயை இழப்பதினால் தான் இவ்வாறான முடிவுகளைக் கையாள்கின்றனர். சாவதற்கு துணிந்தவர்கள் ஏன் வாழத்துனிவதில்லை

தற்கொலை தொடர்பாக இஸ்லாத்தின் நிலைபாடு
ஒரு மனிதன் தன்னுடைய உயிரை, தானே மாய்த்துககொள்ளும் தற்கொலைக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதியில்லை என்பதற்கு யாரும் மறுக்க முடியாதளவுக்குச் சான்றுகள் உள்ளன.

ஒருவருக்கு ஒரு காயமிருந்தது. (இதைத்தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், “எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே, அவனுக்குச் சொர்க்கத்தைத் டை செய்து விட்டேன்’ என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)) – நூல்: புகாரி 1364

“யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத்தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1365

ஒரு காரியம் நிரந்தர நரகமென்று தெரிந்த பின்னால் அதில் விழுந்து விடாமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயபற்ட வேண்டும். போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதைக் கீழ்க்காணும் ஹதீஸ் விளக்குகின்றது.

சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்று விட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கüன் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளால்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர். படையிலிருந்து விலகிப்போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித்தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச்சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண் டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக்கண்ட) நபித்தோழர்கள், “இந்த மனிதர் போரிட்டதைப்போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை” என்று (வியந்து) கூறினார்கள்.

இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவரோ நரகவாசியாவார்” எனக்கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், “நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)” என்று சொல்லி விட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாயின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத்தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாயின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

(இதை உடனிருந்து கண்காணித்து விட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியமளிக்கிறேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர், “சற்று முன்பு தாங்கள் ஒருவரைப்பற்றி “அவர் நரகவாசி’ என்று கூறினீர்களல்லவா? அதைக்கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), “உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாயின் பிடிமுனையைப் பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெüப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்” என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 2898, 3062)

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed