Main Menu

ஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாரிய தீவிபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதனை வெற்றிகரமாக கையாள்வதற்கு பிரதான இடங்களில் குடிநீரிணைப்புடான Fire Hydrant கருவிகளைப் பொருத்தித்தருமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபைக்கு தவிசாளர் ஐ.ரீ,அஸ்மி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் சுத்திகரிக்கப்பட்ட நீரினை குழாய் மூலம் வழங்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் குடியிறுப்புக்கள் மற்றும் கடைத்தொகுதிகளும் அதிக சன நெரிசலுள்ள பகுதியாகவும் காணப்படுவதுடன், தீயணைப்பு நடவடிக்கைகளுக்கான பிரத்தியோக கட்டமைப்பு காணப்படாத துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றன.

எனவே, எமது மக்களின் பதுகாப்பினையும், திடீர் தீ விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உரிய தீயணைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதனையும் கருத்திற்கொண்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோகத்திட்டத்துடன் இணைந்ததாக நீரின் வேகத்தை அதிகரிக்கும் Fire Hydrant கருவியினை பிரதேசத்தின் முக்கிய இடங்களான ஓட்டமாவடி பிரதான வீதி, எம்.பி.சீ.எஸ்.வீதி, மீராவோடை பிரதான வீதி போன்ற இடங்களில் பொருத்திதருமாறு தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களினால் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed