Main Menu

நட்சத்திர ஒளி (Starlight) பற்றி தெளிவாகப்பேசும் அல் குர்ஆன்

இந்த செய்தியைப் பகிர்க >>>

MUM.பாரீஸ் (Bsc)

فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ‏
பிறகு, நட்சத்திரங்கள் ஒளியிழந்து போகும் பொழுது, (அல்குர்ஆன் : 77:8)

நட்சத்திரங்கள் ஒளியிழந்து போகுமா? என்று 1400 ஆண்டுகளுக்கு முன் இவ்விறைவசனம் இறங்கிய போது இக்கேள்வி மனித சமூகத்தில் எழுப்பப்படாமல் இருந்திருக்காது. இவ்வசனம் பேசும் இன்றைய அறிவியல் பற்றிய விளக்கத்தையே இப்பதிவு பேசவிருக்கிறது.

நட்சத்திரங்களின் ஒளியிழந்து போகும் சந்தர்ப்பங்கள் 3 நிலையுள்ளதாக இன்றைய அறிவியல் கூறுகிறது. அவை சம்பந்தமாக விரிவான பார்வையோடு இவ்வேத வசனத்தைப்புரிய வைக்க முயற்சிக்கிறேன்.

White and Black Dwarfs (வெள்ளை மற்றும் கருப்புக்குறும் மீன்), Neutron Stars (நியூட்ரான் நட்சத்திரங்கள்/ நொதுமி விண்மீன்) அல்லது Black Holes (கருந்துளைகள்) என மூன்று வடிவங்களில் ஒன்றில் நட்சத்திரங்கள் தங்கள் வாழ்க்கையை முடிக்க முடியும். அதாவது, நட்சத்திரங்கள் தனது ஔியை இழந்து அழியும்.

ஒரு நட்சத்திரம் அதன் எரிபொருள் அனைத்தையும் எரித்து விட்ட பிறகு, அது அதன் வாழ்நாளில் இறுதியை ப் பொறுத்து மேற்குறிப்பிட்ட மூன்று வடிவங்களில் ஏதோவொன்றை எடுத்து அழிந்து போகும்.

சரி ஒவ்வொன்றாக அறிவியல் விளக்கத்தோடு பார்ப்போம்.

வெள்ளை மற்றும் கருப்புக் குறும்மீன் (White and Black Dwarfs):
வெண் குறுமீன் (White Dwarf) அல்லது வெண்குறளி அல்லது அழியும் குறளி என்பது ஓர் அடர்ந்த நட்சத்திரம் அழிந்த எச்சமாகும். இது சூரியனை நிகர்த்த அடர்த்தியும், புவியை ஒத்த பருமனும் கொண்டிருக்கும். மிக அருகேயுள்ள வெண்குறலி சீரியசு B ஆகும். இது 6 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ளது.

(வெண் குறுமீன் ஃஅபுள் விண்வெளித் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட சீரியசு A /B படத்தை கீழே பதிவிட்டுள்ளேன் பார்க்க)

கருப்புக்குறும்மீன் (Black Dwarf) அல்லது கருங்குறளி என்பது கோட்பாட்டியலான நட்சத்திரம் அழிந்த எச்சமாகும். ஆனால், வெள்ளை குறும்மீன் கண்டறியப்பட்ட நச்சத்திர எச்சம் என நம்பப்படுகிறது. குறிப்பாக, வெண் குறுமீன் ஒளியோ, வெப்பமோ வெளியிட முடியாதபடி போதுமானளவு குளிர்ந்ததும் உருவாகும் இறுதிக்கட்ட நட்சத்திர வகையாகும்.

இந்நிலையை வெண் குறுமீன் அடைய எடுத்துக்கொள்ளும் கால இடைவெளி 13.8 பில்லியன் ஆண்டுகளாக அமைவதால், தற்போது கருப்புக்குறுமீன் ஏதும் நிலவ வாய்ப்பில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

என்றாலும், மிகக்கருப்புக் குறுமீன்கள் கதிர்வீச்சேதும் வெளியிட முடியதென்பதால், அவை விண்ணிலிருந்த போதும் கண்டுபிடிப்பது கடினமானது. அவற்றை ஈர்ப்புத்தாக்கம் கொண்டு மட்டுமே அறியலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

M T M வான்காணகத்தின் 2.4 மீ தொலைநோக்கியால் வானியலாளர்கள் 3900 K வெப்பநிலையிலும் குறைந்த வெப்பநிலையுள்ள MO வகைசார்ந்த பல வெண் குறுமீன்களைக் கண்டறிந்துள்ளனர். இவை 11 முதல் 12 பில்லியன் ஆண்டு அகவையினவாக மதிப்பிடப்பட்டுள்ளன.

நொதுமி விண்மீன் (Neutron Stars)
ஒரு மிகப் பெரிய விண்மீன் ஈர்ப்பு சக்தியால் உருவான வீழ்ச்சியால் மீயொழிர் வெடிப்புக்குட்பட்டு மீதியாக உருவாகும் ஒரு விண்மீன் வகையே நொதுமி விண்மீனாகும். இவ்வகை விண்மீன்கள் மீயொழிர் வெடிப்பிலிருந்து மீண்ட நொதுமிகளாலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இவை மிகுந்த வெப்பமுடைய விண்மீன்களாகும். குவாண்டம் கொள்கைக்கேற்ப இவ்வகை விண்மீன்கள் மென்மேலும் சுருக்கமடைய முடியாது. நொதுமி விண்மீன் சூரியனைப்போல ஒன்று தொடக்கம் இரண்டு மடங்கு திணிவைக் கொண்டாலும், இவ்விண்மீன் மிகவும் சிறியது. அதாவது புவியிலுள்ள சராசரி நகரத்தின் நீளத்தையே ஆரையாகக் கொண்டுள்ளது (12 km).

நொதுமி விண்மீன் புவியை விட 500,000 மடங்கு திணிவு கூடியதென்றாலும், அது அமெரிக்காவின் ப்ரூக்லின் நகரத்தை விட பெரிதானதல்ல.
கீழே 2 வது புகைப்படம் இரண்டு நொதுமி விண்மீன்களின் மோதலாகும்.கருந்துளை Black Holes:
கருங்குழி (Black Hole) அல்லது கருந்துளை என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாதளவு வலுவான ஈர்ப்புச்சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற்குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை (Event Horizon) எனப்படும். இந்நிகழ்வெல்லைக்குள்ளிருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாதென்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியிலிருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பாரிய நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் கனவளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால், இதன் பிரம்மாண்டமான திணிவு (Mass) காரணமாக இது முடிவிலியான அடர்த்தியைக் கொண்டுள்ளது.

கருங்குழி M87 (எம் 87) புகைப்படம் 3 வது பதிவிடப்பட்டிருப்பதாகும்.

இப்படி ஏதாவதொரு வடிவில் நட்சத்திரங்கள் ஔியிழந்து எச்சமாக மாறும். அதன் வடிவம் எதுவாக இருந்தாலும், அதை மனிதன் வெற்றுக்கண்ணால் காண முடியாது. இது சமீபத்தில் அறிவியலால் மட்டுமே அறியப்பட்டது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு குர்ஆன் நட்சத்திரங்கள் ஒளியை இழக்கும் என்று பேசியிருப்பது ஆச்சரியமானது.

فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ‏
பிறகு, நட்சத்திரங்கள் ஒளியிழந்து போகும்பொழுது, (அல்குர்ஆன் : 77:8)

அரபி வார்த்தை “طُمِسَتْ” என்றால் அதன் ஒளியை இழத்தல் என்று பொருள். ஆக, இவ்வசனம் கூறும் அறிவியல் உண்மையான அனைத்து நட்சத்திரங்களும் சாதரண மனித கண்ணுக்குத் தெரியாமல் இறுதியாக ஔியிழந்து மாறுமென்பதை இன்று நாமறிவோம்.

1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு எழுதத்தெரியாத மனிதருக்கு நட்சத்திரங்கள் மங்கி விடுமென்பதை எப்படி அறிந்திருக்க முடியும்? ஆக இது ஒரே இறைவனின் இறுதி வெளிப்பாடாகும்.

(இந்த அறிவியல் உண்மைக்கு மாற்றமான கருத்து பைபில் மாற்கு 13: 24-30-ல் உள்ளது. அறிந்து கொள்ள விரும்புபவர்கள் பார்க்கவும் அல்லது இன் பொக்ஸ் வரவும்)

(வழமை போன்ற தனிப்பட்ட ஆக்கமே இது. பிழைகள் என்னையே சாரும்)

உசாத்துணை / மேலும் கற்க

https://www.space.com/amp/23799-black-dwarfs.html

https://imagine.gsfc.nasa.gov/science/objects/dwarfs1.html

https://www.google.com/amp/s/www.space.com/amp/22180-neutron-stars.html

https://www.livescience.com/neutron-star.html

https://www.nasa.gov/audience/forstudents/k-4/stories/nasa-knows/what-is-a-black-hole-k4.html

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed