Main Menu

இசை பற்றி இஸ்லாமும் : இசை நடனக்கூத்தாடிகளிடம் சிக்கித்தவிக்கும் நாமும்!

இந்த செய்தியைப் பகிர்க >>>

MUM.பாரீஸ் (Bsc)
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!
இசையை ஹெட்ஃபோனில் மாட்டிக்கொண்டு சுயநினைவை இழந்தவாறு வாகனம் ஓட்டிக்கொண்டு அலைந்து திரியும் என் இனிய இளைஞர், இளைஞிகளே உங்கள் அனைவருக்கும்

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

இன்று நாம் காணவிருக்கும் செய்தி இசை பற்றியும் இசையினால் சீரழிந்த , சீரழிந்துக்கொண்டிருக்கும் உங்கள் ஆத்மா பற்றியும் தான்.

இசை என்றால் என்ன?
இசை என்ற சொல்லுக்கு மனதை இசைய வைப்பது என்று பொருளாகும். இசை (Music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அழகான ஒலி என்றும் விளக்கம் கொடுப்பர். இசையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். வட மொழியில் இசையினை நாதம் என அழைப்பா். இந்த நாதம் இரு வகைப்படும்

1) ஆகத நாதம்.
2) அனாகத நாதம்.

ஆகத நாதம்:
மனிதனது முயற்சியால் வேண்டுமென்றே உருவாக்கப்படுவதற்கு ஆகத நாதம் என்று பொருள். இவை இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படுவதைக் குறிக்கும். குறிப்பாக, மேளம் கொட்டுதல், புல்லாங்குழல் ஊதுவது, ஹார்மேனிய பொட்டி, டிரம்ஸ் ஆகியன ஆகத நாதத்தில் அடங்குகின்றன.

அனாகத நாதம்:
மனிதனது முயற்சியில்லாமல் இயற்கையாக கேட்கப்படும் நாதம் அனாகத நாதம் என்று கூறுவர். அதாவது, கடல் அலைகளின் ஓசை, தேனிக்களின் ரிங்காரம், வண்டுகளின் ஓசை, மரங்களில் காற்றின் உராய்வினால் எழும் ஓசை போன்றவற்றைக்கருதலாம்.

ஆக நாதத்தை விரும்பும் மனிதன் அனாகத நாதத்தைப் புறக்கணிக்கிறான். அதாவது மனிதனின் முயற்சியால் இசைக்கப்படும் இசையை காது கொடுத்துக் கேட்கிறான். ஆனால், இறைவன் வகுத்த அனாகத நாதம் எனும் கடல் அலைகளின் ஓசை, தேனிக்களின் ரிங்காரம், வண்டுகளின் ஓசை, மரங்களில் காற்றின் உராய்வினால் எழும் ஓசை கேட்டால் காதுகளை பொத்திக்கொள்கிறான் காரணம் அது எரிச்சலூட்டுகிறதாம்.

இசை பற்றி பகுத்தறிவாளர்கள் முடிவென்ன?
உலகிலுள்ள அனைத்து மதங்களைச்சார்ந்த பகுத்தறிவாளர்கள் இசையை ஆதரவாக குரள் கொடுக்கின்றனர். இசையின்றி எதுவும் இயங்காது இசை தான் இதயங்களை ஒன்றிணைப்பதாகவும், அதனால் உள்ளங்கள் அமைதியுறுவதாகவும் கூறுகிறார். இந்த இசைப்பிரியர்களான பகுத்தறிவாளர்களின் கூற்று முழுக்க முழுக்க பொய் என்பது நம்மால் தெளிவாக நிரூபிக்க இயலும்.

காது கேளாதோர் எந்த இசையையும் கேட்பதில்லை. அவர்களால் வாழ இயலவில்லையா? இசை இனிமையானது தான. அதனால் மனிதனுக்கு நன்மை இருக்கும் எனில் மனிதனைப் படைத்த இறைவன் காது கேளாதோருக்கு துரோகம் இழைத்து விட்டானா? சிந்திக்கமாட்டீர்களா?

இது உண்மையா இஸ்லாத்தின் பாதையில் ஆராய்வோமா?
இசையால் உள்ளம் அமைதி பெறுமென்று கூறும் பகுத்தறிவாளர்களின் வாதம் அல்லாஹ்வின் திருமறைக்கு மாற்றமாகசுள்ளது. இசையால் உள்ளம் அமைதி பெறுவதில்லை. மாறாக, படைத்த இறைவனின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.

ஆதாரம் இதோ உங்கள் இறைவனின் வார்த்தைகளால், நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன் 13:28)

இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் நம்பிக்கை கொண்டோர் என்று கூறுகிறான் அதாவது நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் தான் அமைதி பெறுகின்றன எனும் போது இசையால் உள்ளம் அமைதி பெறுவோர் இறை நம்பிக்கையற்றவர்கள் என்பதாகிறது.

இசை மனிதனை சீரழிக்கும் விதங்களை ஆய்வோம்!
இசை என்னும் கலை மனிதன் மற்றும் உயிரினங்களை தன்னில் இசைய வைப்பதாகவும் மேலும் தன்னுடைய ஸ்வரங்களின் மூலம் வசப்படுத்தி பணியவைப்பதாகவும் பெரும்பாலம் நம்பப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இசைக்கு அடிமையாகாதவர்கள் யாருமில்லை என்றே கூறலாம். காரணம் அந்தளவுக்கு அது தனியிடம் பிடித்து விட்டது.

உதாரணமாக, செல்போன் முதல் தொலைக்காட்சிப்பெட்டி வரை அனைத்திலும் இசை தான் முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால், இசையால் தீமைகளே அதிகம் குறிப்பாக, இளைய தலைமுறையினரைச் சீரழிக்கும் ஆயுதம் இசை என்று கூறினால் அது மிகையாகாது.

இசையினால் மனிதன் எவ்வாறு சீரழிகிறான்?
மதன் இசையைகே கேட்கும் போது, அதனை அறியாமலேயே ஒருவிதமான மதி மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறான். அதன் தாக்கத்தால் தன்னை அறியாமலேயே உதடுகளை அசைத்து பாட ஆரம்பிக்கின்றான். உடலை அசைத்து ஆடவும் ஆரம்பிக்கிறான்.

உடனே அந்த இசையை யாராவது நிறுத்தினால் மனவுளைச்சல் ஏற்பட்டு அவர்கள் மீது கோபம் கொள்கிறான். தட்டிக்கேட்டால் உன் வேலையைப்பார் என்று அதட்டுவதும், ஆத்திரப்பட்டு உதைப்பதும் இன்றைய இளைஞர்களிடம் அன்றாட பண்பாக மாறி விட்டது. இவைகளும் ஷைத்தானின் தூண்டுதல்களாகும்!

இசையை ரசிப்பவர்கள் குடிபோதையில் இருப்பவர்களுடைய மனோ நிலையை பெற்றுவிட்டார்களோ என்று கூட சில நேரம் எண்ணத் தோன்றி விடுகிறது. அந்தளவுக்கு அது மனிதனை குறிப்பாக, இளைஞர்களை சீரழிக்கிறது. மனித இனத்தைச் சீரழிப்பவன் யார் ஷைத்தான் தானே.

விசுவாசம்கொண்டோரே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள், எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை மானக்கேடானதைக் கொண்டும் வெறுக்கப்பட்டதைக் கொண்டும் நிச்சயமாக (ஷைத்தானாகிய) அவன் ஏவுவான். (அல்குர்ஆன் 24:21)

சகோதரர்களே! இந்த திருமறை வசனத்தைச்சற்று கூர்ந்து கவனித்துப்பாருங்கள். ஷைத்தான் மானக் கேடானதையும் வெறுக்கப்பட்டதையும் ஏவுவான் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க இசை இன்றைக்கு நன்மையையா? ஏவுகிறது? இல்லையே!

ஷைத்தானின் முதல் பொக்கிஷமே இசைதான்!

இன்றைய இளைஞர்கள் சினிமா, டான்ஸ், கூத்து கும்மாளம் என்று செல்வதற்கு எது மூலகாரணமாக இருக்கிறது இசை தானே. அந்த இசையைக் கொண்டு தானே பல்வேறு பாவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

இசையில் மயங்கிய இளைஞர்களும், கல்லூரி மாணவிகளும் எத்தனை எத்தனை பொய்கள் சொல்லி, வீட்டலுள்ள பணத்தை களவாடி, பெற்றோரைத் துன்புறுத்தி பணம் பெற்று இறுதியாக கிடைத்த பணத்தைக்கொண்டு சினிமா, டான்ஸ் கிளப்புகள், கூத்தாட்டம், மயிலாட்டம் என்று சீரழிவது.

இப்படிப்பட்ட இடங்களுக்குச்செல்வதால் ஆண், பெண் என்ற பாகுபாடுகளை மறந்து கண்டவர்களுடன் தகாத உறவுகளைக் கொண்டு கெட்டு சின்னாபின்னமாகி செல்கின்றனர். அப்படிப்பட்ட இசையை நாம் ஆதரிக்கலாமா? இதோ ஷைத்தானைப் பற்றிய நபிமொழி!

ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றான். மனிதனை மானக்கேடான செயல்களில் அழைத்துச்செல்லும் பாதைகளில் அன்னியப் பெண்ணுடன் தனிமையிலாக்குவதும் ஒன்று.

நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள்.
(அன்னியப்) பெண்ணுடன் தனித்திருப்பவனுடன் மூன்றாம் நபராக நிச்சயமாக ஷைத்தான் இருப்பான். (அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அஹமத்)

இன்று இசை நடன கூத்தாடிகளிடம் நாம் …

நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்.
உயிர் உள்ள வரை, ஒரு துன்பம் இல்லை.
அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்.

ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்!

உடல் உழைக்க சொல்வேன்!
அதில் பிழைக்கச் சொல்வேன்!
அவர் உரிமை பொருட்களைத் தொட மாட்டேன்!

சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்.
ஒரு மானமில்லை!
அதில் ஈனமில்லை!
அவர் எப்போதும் வால் பிடிப்பார்!

உங்கள் பாஷையில் கூறுவதாக இருந்தால், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அமுத கானம். அறிவாளிகளே சிந்தியுங்கள். இந்த பாட்டின் அர்த்தத்திலும் இசையிலும் உங்கள் மதியை எவ்வாறு மயக்கி இருக்கிறது என்று?

இங்கு எம்.ஜி.ஆரை மட்டும் அடையாளப்படுத்துவதாக எண்ணிவிடாதீர். மாறாக, அவரைத்தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், ரஜினி, கமல், அஜித், விஜய், இன்று விஷால் வரை அனைத்து சினிமா கலைக்கூத்தாடிகளையும் சேர்த்துத்தான் கூறுகிறோம்.

சிந்தித்துப் பாருங்கள்
ஊர் பேர் தெரியாதவன் சினிமாவில் சுய இலாபத்திற்காக ஆபாசமாகப் பெண்களின் இடையை, உடையை, அழகை தொடுவானாம். அதைப்பெரிய திறை மற்றும் சின்னத்திறையில் கூட்டமாக குடும்பமாக அமர்ந்து ரசித்து, ருசித்து ஆஹா இவனல்லவோ நடிகன் என்று நம்புகின்றான் தன்மானத்தமிழன் வேறு யாருமில்லை இசையை விரும்பும் நீங்கள் தான்.

மக்களின் கண்ணியத்தைச் சீர்குலைத்த சினிமா!

முதலில் ஒட்ட நாடகம், மேடை நாடகம், கச்சேரி, கூத்து, சினிமா, கேப்ரா டேன்ஸ், டான்ஸ் கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், டாஸ்மாக் மதுபான கடை ஆகியவற்றின் தாய் யார்? இசைதான் இந்த இசை தான் மக்களின் கண்ணியத்தை சீர்குலைத்தது .

இதோ நபிகள் நாயகம் (ஸல்) சினிமா பற்றி என்ன சொல்கிறார்கள் சற்று செவி தாழ்த்திக்கேளுங்கள்!

‘கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும், அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப்படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் நூல்: புகாரி 80

இசையினால் ஏற்படும் உடல் பாதிப்புகள்
இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா? என்றால் நிச்சயமில்லை. மாறாக, இசையைக்கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல், தூக்கமின்மை, அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன.

இசை கேட்கும் போது மனித உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கின்றதென்பதை சமீபத்தில் ஓர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அட்ரினலின் என்ற ஹார்மோன் பொதுவாக ஏதாவது மன இறுக்கம் ஏற்படும் போதோ, அல்லது சாதாரண நிலைகளிலோ சிறிதளவு தான் உற்பத்தியாகின்றது.

இசை கேட்கும் போது அட்ரினலின் தொடர்ந்து உற்பத்தியாகின்றது. அட்ரினலின் அதிகமாக உற்பத்தியாவதால் மனித உடலில் ஒரு பரபரப்பும், அமைதியின்மை, தூக்கமின்மை போன்றவையும் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இதனால் மேலும் பல தீமைகள் ஏற்படுகின்றன.

இங்கிலாந்து மருத்துவர் எம்மா ஹாரிசன் கருத்துப்படி
சுமார் 2700 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக சத்தத்துடன் இசை கேட்பவர்களில் 80 விழுக்காட்டினருக்கு காதுகளில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

இசைக்காக ஹெட்போன் (HEADPHONE) அதன் பாதிப்புகள்
செல்போன், எஃப்.எம். ரேடியோ அல்லது இதர உபகரணங்களைக் கொண்டு ஏதாவது இசையை ரசித்துக் கொண்டே படுப்பது, நடப்பது, வாகனம் ஓட்டுவது இன்று அன்றாட வாடிக்கையாகி விட்டது. இதனால் அதிக டெசிபல் அல்லது நிறுத்தாமல் (Non stop) பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அதிர்வலைகளால் காது நரம்புகளுக்கு நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் காது கேட்கும் திறன் மெதுவாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஒலி அலைகளை உருவாக்கக்கூடிய உட்புறக்காதில் அடங்கிய ஸ்பைரல் கேவிட்டியான கோச்லியா (Cochlea) ஹெட்ஃபோன் ஒலியைத் தாங்கக்கூடியதாகும். இந்த கோச்லியாவிற்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுமென்று டாக்டர்கள் கூறியுள்ளனர். ஹெட்போனை அதிகளவில் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுதல், தலைவலி, காதுவலி போன்றவை சாதாரணமாக ஏற்படுமென்றும் தெரிய வந்துள்ளது.

இசை அருகில் உள்ளவர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் பாதிப்பு :
இசை மயக்கத்தால் அதிகமாக சவுண்டு வைப்பது அண்டை வீட்டாருக்கும் ஏன் நம் வீட்டாருக்கும் மனவுலைச்சல், மன அமைதியின்மை, படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, இரைச்சல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த இசையை ரசிப்பவர்கள் இதைக் கவனிப்பதில்லை கவனித்தாலும் அதை வேண்டுமென்றே செய்கின்றனர்.

அண்டை வீட்டார் பற்றிய நபிமொழி
‘இறைவன் மீது ஆணையாக, அவன் இறைநம்பிக்கையில்லாதவன்! ‘ என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்?’ என்று வினவப்பட்டது. ‘எவனுடைய அண்டை வீட்டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!‘ என்று பதிலளித்தார்கள் அண்ணலார். அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்

மார்க்கப் பணிகளில் பாதிப்பு:
இன்று இசை செல்போன்களில் இடம்பெறுகிறது. இதனால் தொழுகையில் நிற்கும் பொது செல்போனில் ஒளிக்கும் பாப் இசை, ஆபாச சினிமா பாடல் டியுன்கள் தொழுகின்ற தொழுகையாளிக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது. பாங்கு சப்தம் கேட்கும் போது, அதற்கு பதில்ளிப்பது நமது கடமையாகும். ஆனால், இந்த பாங்கு சப்தத்தை கேட்கவிடாமல் தடுக்கும் ஒரு சாதணமாக இசை இருக்கிறது,

ஒரு மார்க்க விளக்க ப்பொதுக்கூட்டம் நடைபெறும் போது, அந்த வழியாகசெல்லும் கார், பேருந்து போன்ற வாகனத்தில் இசை இசைக்கப்பட்டால் மக்கள் திசை திருப்பப்படுகிறார்கள்.

முடிவுரை
இசைக்கு நீங்கள் இசைந்தால் இசை உங்களை அடிமையாக்கி விடும். சகோதரர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது இசைக்கு அடிமையாக விரும்புகிறீர்களா? என்பது இளைஞர் விருப்பம்!

மதுபானத்தைப்போன்று இசையினால் நன்மை குறைவாக இருந்தாலும் 80% தீமைகளே அதிகமாகவுள்ளது. அல்லாஹ் திருமறையில் கூறுவது போல், அவற்றில் சில பலன்கள் இருந்தாலும், அதனால் ஏற்படும் பாவம் பலனை விட பெரிது. அப்படிப்பட்ட கீழ்கண்ட இறைவசனத்தை படித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவும்.

நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் ”அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலுமுள்ள பாவம் அவ்விரண்டிலுமிள்ள பலனைவிடப் பெரிது‘‘ (நபியே! ”தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச்செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; ”(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு இறைவன் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (அல் குர்ஆன் 2 : 219)

என்னுடைய கருத்தில் தவறு தென்பட்டால், மன்னிக்கவும் தெளிவாக எடுத்துக்கூறுவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை! நான் இசையை வெறுக்கிறேன்! வெறுப்பவர்களும் வெறுக்கிறார்கள்!

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்ன் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல் குர்ஆன்13:28)

(இது எனது ஆக்கமல்ல. தேவை கருதி சில மாற்றங்களுடன் பதிவிட்டுள்ளேன்)

ஆக்கம் : islamtheparadise.wordpress.com

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed