Main Menu

நம்ப முடியாத உண்மை : “Sonic Weapon” பற்றிப் பேசும் அல் குர்ஆன்

இந்த செய்தியைப் பகிர்க >>>

MUM.பாரீஸ் (Bsc) – ஓட்டமாவடி

وَاَخَذَ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ‏
அக்கிரமம் செய்தவர்களை ஒரு பயங்கர ஓசை தாக்கியது! அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிந்து விட்டனர். (அல்குர்ஆன் : 11:67)

மேற்குறிப்பிட்ட வசனம் ஒரு சமூகத்திற்கு ஒரு ஒலி தாக்கியதாகவும் அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிந்து விட்டனர் என்றும் கூறுகிறது.

சில காலங்களுக்கு முன் வரை இவ்வசனம் அறிவியலில் சாத்தியமாகாதென்றும், ஒலியால் காதுகளை மாத்திரம் தான் பாதிப்படையச்செய்ய முடியுமென்றும் சிலர் வாதிட்டனர். அறவே ஒலியால் அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிவது சத்தியமாகாது என்றனர்.

இவ்வசனம் மிகப்பெரியதொரு அறிவியலை விளக்குகிறது. ஆம், அது தான் Sonic Weapon (சோனிக் / மீயொலி ஆயுதங்கள்)

சோனிக் / மீயொலி ஆயுதங்கள் (USW) என்பது இதுவரை அறிவியல் தொட்டு விட்ட இலக்குகளின்படி, ஒலியை ஆயுதமாகப் பயன்படுத்தும் பட்சத்தில் ஒன்றை தாக்கும் ஆயுதம். இது பல வகையானது. அவைகள் எதிரியைக் காயப்படுத்தவோ அல்லது கொல்லவோ ஒலியைப் பயன்படுத்துகின்றன.

சில சோனிக் ஆயுதங்கள் தற்போது வரையறுக்கப்பட்ட பயன்பாட்டில் உள்ளன. மேலும், சில ஒலி ஆயுதங்கள் இராணுவ மற்றும் பொலிஸ் படைகளின் ஆராய்ச்சி மற்றும் பயன்படுத்தும் பயிற்சியில் உள்ளன. இந்த ஆயுதங்களில் சில சோனிக் தோட்டாக்கள், சோனிக் கையெறி குண்டுகள், சோனிக் சுரங்கங்கள் அல்லது சோனிக் பீரங்கிகள் என நாளடைவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

Sonic Weapon சாதாரண தரத்தில் பயன்படுத்தப்பட்டால், கேட்கும் திறன் குறைதல், தலைவலி, குமட்டல் மற்றும் மூளை பாதிப்பு (கவனஞ்செலுத்த முடியாத நிலை). இவ்வகைப் பாதிப்புகளில் கேட்கும் திறன் செயலிழப்பு, லேசான தலைவலி ஏற்படுமென்றும். Sonic Weapon உயர் தரத்தில் பயன்படுத்தினால் மூளை நரம்புகளை வெடிக்கச்செய்து அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து ஒரு சில நொடியில் மரணிக்கச்செய்ய முடியும் என்கின்றனர் இன்றைய ஆய்வாளர்கள்.

ஒலி அலைகள் காயப்படுத்தலாம் அல்லது கொல்லக்கூடுமென்பது சமீபத்தில் அறியப்பட்டது, இருப்பினும், இது குர்ஆனில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் பேசியிருக்கிறதென்றால், வியப்புத்தான். அதுவும் ஒலி மிகவும் உச்சி மீடிரனில் தாக்கினால் எப்படி இறந்து கிடப்பார்கள் என்பதனை மிகத்தெளிவாகவே குர்ஆன் விளக்குகிறது.

ஒரு சமூத்தின் சமூக மக்கள் ஒரு ஒலி அலையால் கொல்லப்பட்டனர் என்று குர்ஆனின் வசனங்கள் பதிவு செய்திருக்கிறது. ஒரு Sonic Weapon முழுத்திறனுடன் தாக்கினால் மிகச்சரியாக எப்படி இருக்குமென்றால்,

وَاَخَذَ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ‏
அக்கிரமம் செய்தவர்களை ஒரு பயங்கர ஓசை தாக்கியது! அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிந்து விட்டனர். (அல்குர்ஆன் : 11:67) இப்படித்தான்.

1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒலி யாரையும் காயப்படுத்தவோ, கொல்லவோ முடியுமென்று யாரும் நம்பவில்லை. ஆனால், இப்புரிதல் தவறானதென்று இன்று நமக்குத் தெரியும்.

“Saiha صَّيْحَةُ” என்றால் பயங்கர / கடுமையான ஓசை என்று பொருள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒலி யாரையும் காயப்படுத்தவோ கொல்லவோ முடியுமென்று எந்த மனிதனும் நம்பாத போது, அப்போது வாழ்ந்த ஒரு எழுத வாசிக்கத் தெரியாத மனிதர் தீவிர ஒலியைக்கொண்டு கொல்ல முடியுமென்பதை எப்படி அறிந்திருக்க முடியும்?

ஆக, இவ்வேதம் மனிதனால் எழுத அறவே வாய்ப்பில்லாத ஏக இறைவனால் இறக்கப்பட்ட இறுதி வேதமென்று வளர்ந்து வரும் அறிவியல் உறுதிப்படுத்துகிறது.

நன்றி.

உசாத்துணை/மேலும் கற்க

குர்ஆன்

https://en.m.wikipedia.org/wiki/Sonic_weapon

www.popularmechanics.com/military/weapons/amp29216045/chinese-sonic-weapon/

spectrum.ieee.org/semiconductors/devices/finally-a-likely-explanation-for-the-sonic-weapon-used-at-the-us-embassy-in-cuba.amp.html

www.history.com/.amp/news/sonic-weapons-warfare-acoustic

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed