Main Menu

ஆயுதங்களை வைத்திருந்த ஊவதென்ன சமண தேரருக்கு ஆயுள் தண்டனை

இந்த செய்தியைப் பகிர்க >>>
மாளிகாவத்தை சிறி போதி ராஜ மகா விகாரை விகாராதிபதி ஊவதென்ன சமண தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. T 56 ரக துப்பாக்கிகள் இரண்டு, 50 கைக்குண்டுகள், 210 துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விகாரைக்குள் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபணமானதையிட்டு கொழும்பு மேல் நீதி மன்றத்தினால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
நேற்றைய தினம் (01) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதியத்ய பட்ட பெந்திக்கவினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2010 ஜனாதிபதித்தேர்தலின் போது, ஜனவரி 02 ம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றிற்கமைய குறித்த விகாரையைச்சுற்றி வளைத்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியிருந்தனர்.
 
இந்த வழக்கில் ஊவதென்ன தேரருடன் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அதே விகாரையைச்சேர்ந்த நாவல சுபோத தேரரும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான ராஜபாலன், தமிழ்ச்செல்வன், சந்தானம் சுப்ரமணியம் ஆகியோர் வழக்கு விசாரணைகளின் இடைநடுவே நிரபராதிகள் என நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
-சமூகம்
இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed