Main Menu

பிரதேச சபை உறுப்பினரின் சொந்த நிதியில் ஒளியூட்டும் நடவடிக்கை

இந்த செய்தியைப் பகிர்க >>>
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தியாவட்டவான் (210C) வட்டாரம் மிகவும் பின்தங்கிய ஆறு மீள்குடியேற்றக் கிராமங்களை உள்ளடக்கிய பாரிய பிரதேசமாகக் காணப்படுகிறது.
 
இவ்வட்டார மக்கள் பல்வேறு அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் நிலையில், இப்பிரதேசத்திலுள்ள வீதிகள் மின் விளக்குகள் இன்மையால் இருள் சூழ்ந்து காணப்படுவதன் காரணமாக, போக்குவரத்து ரீதியான பல்வேறு அசெளகரியங்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது.
 
இரவு வேளைகளில் அவசரத் தேவைகளுக்காகவும் வைத்தியசாலை மற்றும் வேறு தேவைகளுக்கு செல்வோர் அச்சத்துடனே சென்று வர வேண்டிய நிலையைக் கருத்திற்கொண்டு, இருளடைந்து காணப்படும் வீதிகளுக்கு மின் விளக்குகளைப் பொருத்தித்தருமாறு பிரதேச சபை உறுப்பினர் AG.அஸீஸுல் றஹீம் ஆசிரியரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
 
மேற்படி மக்களின் வேண்டுகோள் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் சபை அமர்வுகளில் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் எந்தவித தீர்வும் கிட்டாத நிலையில் தனது சொந்த நிதியிலிருந்து மயிலன்கரச்சை, பாலை நகர், ஹிஜ்ரா நகர் ஆகிய கிராமங்களில் இருளடைந்து காணப்பட்ட வீதிகளுக்கு வீதி மின் விளக்குகளைப் பொருத்திக் கொடுத்துள்ளார்.
 
இம்முன்மாதிரிமிக்க சேவையை மேற்கொண்ட பிரதேச சபை உறுப்பினருக்கு மயிலன்கரச்சை கோயில் தர்மகர்த்தாக்கள், இளைஞர்கள், கிராமங்களின் சமூக நிறுவனத்தலைவர்களும் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed