Main Menu

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்காக….

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஏ.எல்.நாஸர்
கோவிட்- 19 காரணமாக பாதிக்கப்பட்ட வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தங்களைப் பதிவு செய்யவும், அவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் வெளிவிவகார அமைச்சு (MFR) மற்றும் ICTA என்பன இணைந்து https://www.contactsrilanka.mfa.gov.lk/ எனும் புதிய இணையத்தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக வெளிநாடுகளிலுள்ள அனைவரும் மிக விரைவாகப்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த இணைப்பினை சகலருக்கும் பகிர்ந்து அவர்களையும் பதிவதற்கு உதவி புரிவதுடன், இவ்வேலைத்திட்டம் வெற்றி பெறுவதற்கு உதவி புரியும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதே நேரம், விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் உங்களில் யாராவது நாடு செல்ல விரும்பினால், தயவு செய்து கீழ்ததரப்பட்டுள்ள slemb.kuwait@mfa.gov.lk எனும் மின்னஞ்சலுக்கு உங்கள் கடவுச்சீட்டு (Passport) பிரதியை அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed