அல்-குர்ஆன் பேசும் சமானக்கொள்கை (Equivalence Principle)
MUM.பாரீஸ் (Bsc)
இன்று நவீன அறிவியலில் பேசப்படும் Equivalence Principle என்ற சமானக்கொள்கை அறிவியலை அல்-குர்ஆனுடன் தொடர்புபடுத்தி இப்பதிவு பேசவிருக்கிறது..
சமானக்கொள்கை (Equivalence Principle)
ஆர்முடுகள் ஈர்ப்புக்கு சமம். இதனை ஆங்கிலத்தில் Acceleration is Equivalent to Gravity என்பார்கள். இயலுமான வரை இவ்வறிவியலை எளிமையாகப் புரிய வைக்க முயற்சிக்கிறேன்.
நம்மனைவருக்கும் தராசு தெரிந்திருக்கும். அதாவது, டிஜிடல் தராசல்ல. 1400 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்திய இரு பக்கத்திலும் தட்டையும் நடுவே ஒரு முல்லையும் கொண்ட தராசு. (கீழே 1 வது படத்தினைப்பார்க்க)
இத்தராசில் சமநிலையைப் பயன்படுத்தியே நிறுப்பர். ஒரு பக்கத்தட்டில் ஒரு படிக்கல் (ஏதோவொரு நிறை), அடுத்த தட்டில் எதை நிறுக்க வேண்டுமோ, அதனையிட்டு இரு நிறையும் சமனாகும் போது, நடு ஊசி சமனிலையைக் காட்டும். இதனூடாக நிறுத்தனர். இதில் பெரிய அதிசயம் ஏதுமில்லையென்று நினைப்பீர்கள்.
ஒரு அதிசயமிருக்கிறது. இதனைப்பயன்படுத்தி பூமியில் தான் சமனிலையைப்பேணி நிறுக்க முடியும். வானவெளியில் நிறுக்க முடியாது. அதாவது, பூமியின் ஈர்ப்பினால் தான் கீழ்நோக்கி படிக்கல்லும் நிறுக்கும் பொருளும் ஒரே ஆர்முடுகளால் ஈர்க்கப்பட எம்மால் தராசைப்பயன்படுத்தி நிறுக்க முடியும்.
விண்வெளியில் எந்த ஈர்ப்புமில்லாததால் (ஈர்ப்பு -“0” Zero-Gravity) என்பதால், எதுவும் எதையும் கீழ்நோக்கியோ மேல் நோக்கியோ இழுக்காது. எல்லாப்பொருளும் அங்கு மிதக்கும். ஆகவே, இத்தராசை அங்கு பயன்படுத்த முடியாது.
ஆனால், இத்தராசை அங்கு பயன்படுத்த ஒரு வழியுண்டு. அது தான் Acceleration is Equivalent to Gravity என்ற தத்துவம். ஐன்ஸ்டீனின் பொது சார்பியலின் அடிப்படையில் நாம் விண்வெளியில் ஒரு ஆர்முடுகளில் பயணித்தால், அந்த ஆர்முடுகள் ஈர்ப்புக்குச் சமனாகும். என்ன புரியவில்லையா? சரி, புரியும்படி தராசைக் கொண்டே சொல்கிறேன்.
நீங்கள் தராசை விண்வெளியில் ஓய்விலுள்ள ஒரு விண்வெளி ஓடத்தில் (ரொக்கெட்டில்) வைத்து நிறுக்க நினைத்தால், நிறுக்க முடியாது. ஆனால், விண்வெளி ஓடத்தினை (ரொக்கெட்டினை) புவியின் ஈர்ப்பு ஆர்முடுக்குச் சமனான ஆர்முடுகளில் மேல் நோக்கி ஓட்டும் போது, இத்தராசைப் பயன்படுத்தி நிறுத்தீர்களானால், இப்போது பூமியில் நிறுக்கும் போது, என்ன நிறையோ அதே நிறையை அங்கு நிறுத்துப் பெற்றுக்கொள்வீர்கள். இதை வைத்துத்தான் ஆர்முடுகள் ஈர்ப்புக்கு சமம் என அறிவியலாளர்கள் கண்டறிந்தார்கள்
ஆம், ஒரு பொருளின் நிறை பூமியலுள்ள போது, ஒரு நிறையாகவும் , பூச்சிய ஈர்ப்பு(Zero-Gravity) உள்ள விண்வெளியில் நிறையற்றதாகவும், அந்தப்பொருள் ஆர்முடுகளில் நிறுக்கும் போது அதற்கேற்றால் போல் ஒரு நிறையாகவும் இருக்கும்.
சரி, இந்த அறிவியல் உண்மை அல்-குர்ஆனில் பேசப்படுகிறதென்றால் நம்புவீர்களா?
وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيْزَانَۙ
மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். (அல்குர்ஆன் : 55:7)
இறைவன் வானத்தை உயர்த்தி தராசை ஏற்படுத்தியதாக இவ்வசனம் சொல்கிறது. வானத்தை உயர்த்தியதற்கும் தராசை ஏற்படுத்தியதற்கும் என்ன தொடர்பு? ஏன் இறைவன் தொடர்புபடுத்த வோண்டும்?
அதாவது, வானத்தை உயர்த்தாமல் இருந்திருந்தால், பூமியிலும் Zero-Gravity ஆக இருக்கும். அப்படியிருந்தால், பூமியில் தராசு செயற்படாது. ஆக, Zero-Gravity ஆக இருக்கும் வானத்தை உயர்த்தி, பூமிக்கு ஈர்ப்பு ஆர்முடுகளை உருவாக்கியதால் தராசு பூமியில் பயன்படுத்தப்படுகிறது என இவ்வசனம் பேசுகிறது.
மறைமுகமாக தராசு (சமநிலை) ஈர்ப்பு / ஆர்முடுகள் உள்ள நிலையில் மட்டுமே செயற்படுகிறதென்ற சமானக்கொள்கையை (Equivalence Principle) அல்-குர்ஆன் பேசுகிறது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு எழுத வாசிக்கத் தெரியாத மனிதர் சமநிலை ஈர்ப்பு அல்லது ஆர்முடுகளில் மட்டுமே செயற்படுகிறதென்பதையும் விண்வெளியில் (வானத்தில் ) Zero-Gravity என்பதையும் எப்படி அறிந்திருக்க முடியும்?
நன்றி
MUM.பாரீஸ் (Bsc)
ஓட்டமாவடி.
உசாத்துணைகள்/Equivalence Principle பற்றி மேலும் கற்க.
https://physics.aps.org/articles/v10/s133
https://iopscience.iop.org/article/10.1088/0264-9381/13/11A/005/pdf
https://en.m.wikipedia.org/wiki/Equivalence_principle
https://youtu.be/mAtRD9_4Oa0
Comments are Closed