Main Menu

அமெரிக்காவின் நிற வெறியும் : இஸ்லாம் வழங்கிய கண்ணியமும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

MUM. பாரீஸ் (Bsc)
சாதி வெறியும், நிற வெறியும் இன்றைய நூற்றாண்டில் நாகரீக உச்சத்தை அடைந்த அமெரிக்காவில் தலைவிரித்தாடி, ஒரு கருப்பின மகன் கால்களால் நெரித்து மூச்சுத்தினறி சாகடிக்கப்பட்டானே,
இந்நிலை பற்றிச்சிந்தித்ததுண்டா?

சூத்திரன் (வேசியின் மகன்) சக்கிலியன், பறையன், அசுரன் என்றும் உங்களைக் காலின் கீழேயும், உன் கை, கால் பட்டால் தீட்டு, ஏன் உன் நிழல் பட்டால் கூட தீட்டு. நாங்கள் தேவர்கள் (பிராமணன்), நீ எங்கள் தேவைக்காகப் படைக்கப்பட்டவன் என்று உன்னை அவன் மலம் அள்ளவும் பயன்படுத்தினானே சிந்தித்ததுண்டா?

இதற்கெல்லாம் சமூக நீதி, சுதந்திரம், உரிமை கேட்டும் இந்த நவீன நூற்றாண்டில் பிச்சை கேட்டு அழைகிறாயே. உனக்கான தீர்வு 1400 வருடங்களுக்கு முன் தரப்பட்டிருக்கிறதே, ஏன் அதை ஏற்க மறுக்கிறாய்? நண்பா..!

தன்னை ராஜாக்களாக நினைத்து தனது வீட்டு அசிங்கங்களை சுத்தம் செய்ய நிற, சாதி வெறி கொண்டு கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களைப் பயன்படுத்தும் அன்றைய அறியாமையின் சமூகமாகிய அரபு சமூகத்தில், முஹம்மது என்ற மாபெரும் புரட்சியாளன் உண்டு பண்ணிய புரட்சி முதன் முதன் இறைவனை வணங்க மக்களை அழைக்கபபயன்படுத்திய அந்த முதல் வாங்கோசை யாருடையது தெரியுமா?

அரபு சமூகத்தில் எந்த உரிமையும் இல்லாமல் கேவலமாகவும் உரிமையற்றவனாகவும் அடிமையாகவும் குனிந்த தலையும் சுருட்டை முடியும் கருத்த உருவமும் கொண்ட பிலால் எனும் கருப்பினத்தவரை என்றால் இந்தப்புரட்சியை என்னவென்பது?

இது தான் புரட்சி. எந்தக்கறுப்பினம் வெறுக்கப்பட்டதோ! எந்தக்கறுப்பினம் கேவலமாகப் பார்க்கப்பட்டதோ! எந்தக்கருப்பினம் தன் வீட்டுக் கழிவறைகளைச் சுத்தம் செய்யப்பயன்படுத்தப்பட்டதோ, அதே கறுப்பினம் தன்னை ராஜாக்களாக நினைத்த அரபு எஜமான்களை இறைவனின் பக்கம் அழைக்க மகா ராஜாவாக முகம்மது எனும் புரட்சித்தளபதியால் நியமிக்கப்பட்டது.

அன்று அந்தக்கறுப்பு மனிதன் கூறிய “அல்லாஹூ அக்பர்” என்று ஆரம்பிக்கும் அதான் ஓசை இன்றும் கூட ஓய்வின்றி ஒரு நொடிக்கு 5 முறை உலகில் பல திசைகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த உரிமைக்குரலை முஸ்லிம்களாகிய நாங்கள் அணையாமல் பாதுகாத்துக் கொண்டே இருக்கிறோம்.

ஆம், இலங்கையில் அதிகாலை 4.00 மணிக்கு அக்குரல் வாங்கோசையாக ஒலித்தால், இந்தியாவில் தமிழ்நாட்டில் அடுத்த நொடி ஒலிக்கும். சற்று தாமதமாக பாகிஸ்தானில் ஒலிக்கும். இங்கு 7 மணியாகும் போது, அமெரிக்காவில் 4.00 மணிக்கான அந்தக்குரல் ஒலிக்கும். ஒரே இடத்தில் ஒரு நாளைக்கு 5 முறையும் உலகத்தில் 24 மணி நேரத்தில் ஒரு நொடி இடைவெளியில்லாமல் இந்த நிற, சாதி வெறிக்கெதிராக அன்று ஒரு கறுப்பின மனிதர் எழுப்பிய குரல் வாங்கோசையாக தொழுகைக்கான அழைப்பாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

உன் காதில் அந்த அழைப்புக்கேட்கவில்லையா தோழா? அந்த உரிமைக்குரலுக்கு பதிலளித்து நீயும் இந்த இஸ்லாம் எனும் புரட்சியைக் கையிலெடு. உன்னைப் பிறப்பால் வேசியின் மகன் என்று சொன்னால், இந்தப்புரட்சி அவன் உடலைச் சிதைத்து விடும். நான் விளையாட்டாகச் சொல்லவில்லை தோழா. எவனொரு பெண்ணின் கற்பில் அவதூறு சுமத்துகிறானோ, அவன் தகுந்த சாட்சியத்தைக் கொண்டு வராவிட்டால், 80 கசையடி இஸ்லாத்தில் கொடுக்கப்படும். ஞாபகம் வை தோழா.

இந்த நொடி அந்த அழைப்புக்கு பதில் கொடு. அடுத்த நொடி இறைவனை வணங்கும் தொழுகையில் உன்னை எங்கள் தலைமையாக ஏற்க நாங்கள் தயார். உன்னை எங்கள் சகோதரனாக்குவோம். உன் நெற்றியில் முத்தமிட்டு, உன்னை தீண்டத்தகாதவன் என்று சொன்னவர்கள் முன் கட்டியணைத்து ஒன்றாக ஒரே தட்டில் உணவருந்துவோம்.

உன்னை மனிதனாக, மிகச்சிறந்த படைப்பாக இறைவன் மாற்றுவான். அந்தக்கறுப்பின அடிமையின் புரட்சி முழக்கத்தில் உன்னையும் சேர்த்துகொள்.

இன்று அமெரிக்காவில் கால்களுக்கிடையில் மூச்சித்திணறிய அடிமை இனமும் உன் இனமும் விடுபட உன்னைப்போன்ற அந்த அடிமை கறுப்பினத்தவன் அன்று எழுப்பிய அந்த உரிமைப்புரட்சிக் குரலுக்கு பதிலளித்து, சாதி, நிற வெறியற்ற தூய்மையான மனித மார்க்கத்தின் பக்கம் வந்து சேர்.

நன்றி.

MUM. பாரீஸ் (Bsc)

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed