Main Menu

மன்சூர் எனும் ஆளுமை

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் – வாழைச்சேனை
1980 களில் பெருந்தலைவர் அஷ்ரஃபின் தனித்துவ அரசியல் பயணத்தில் இணைந்து கொண்டு, 1986 இல் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியலில் கட்சிப்போராளியாக உருவெடுத்த முன்னாள் பா.உ. எம்.ஐ.எம். மன்சூர் இன்று 34 வருடங்களைத் தாண்டிய கட்சி மாறாமல் ஒரே கொள்கையோடு கட்டங்கட்டமாக 2015 இல் எம்.பி.பதவிக்கு வந்துள்ளார்.

இவருக்குரிய அரசியல் அங்கீகாரம் 1994 இல் கிடைத்திருக்க வேண்டும். பீ.எஸ்.சி. பட்டப்பிற்காக கல்கலைக்கழகம் சென்று உயர்கல்வியை 1989 இல் பங்கரவாதப்பிரச்சினை, முஸ்லிம் சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இவைகளுக்காக தனது பட்டத்தைத்தொடர முடியாது தியாகம் செய்தவர். 1989 காலப்பகுதியில் இனத்துவ அரசியல் வட கிழக்கில் நிலைபெற்ற காலங்களில் அப்போதைய வட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.வை.எம்.மன்சூர், முனாஸ் காரியப்பர் போன்றோர்களுடன் இணைந்து கட்சியை வளத்தெடுப்பதில் பாடுபட்டவர். இதனால் அப்போது தமிழ் ஆயுதக்குழுக்களினால் தேடப்பட்டவர் (இது இப்போதைய இளைஞர்களள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை)

இக்கால கட்டத்தில் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடன் சேர்ந்து கட்சிக்கும், சமூகத்திற்கும் பாரிய தொண்டாற்றியவர். தான் வகித்து வந்த இன்று உயர் பதவிலியிருந்திருக்க வேண்டிய சுங்க அதிகாரி பதவியை இராஜினாமாச் செய்து சமூகத்தைப் பாதுகாக்க முன்வந்தார்.

அது மட்டுல்லாத, 2000 இல் பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களது மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சீரழிந்த போது தோள் கொடுத்து சம்மாந்துறையில் முஸ்லிம் காங்கிரஸை நிலைநாட்டி இப்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களைத் தலைவராக்குவதிலும், உறுதுணையாக இருப்பதிலும் மிக்க பலமாக இருந்தவர் தான் எமது மன்சூர் முன்னாள் எம்.பி. இது பலருக்கும் தெரியுமா? எவரும் முன்வராத நிலையில் 2000 ஆம் ஆண்டில் சம்மாந்துறைத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக அரசியலில் அங்கீகாரம் பெற்றார் சேவையாற்றுவதற்காக.

2006 இல் சம்மாந்துறை பிரதேச சபையில் அமோக வெற்றி பெற்று தவிசாளரானார். இதன் மூலம் சம்மாந்துறையை பலவழிகளிலும் அபிவிருத்திகள் செய்தார். அந்த வகையில், கிராமிய வீதிகள் தார் விதிகளாக மாற்றியமை, நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு திண்மக்கழிவகற்றும் பணிகள் மேற்கொண்டமை, வீதி அபிவிருத்திகள், தெரு இலாம்புகள் இடல், சகர சபைக்கான முன்மொழிவுகள், புதிய பிரதேச சபைக்கான கட்டடம் இவரது முன்மொழியப்பட்ட செயற்றிட்டம், மக்களின் வரிப்பணத்திலிருந்து பல மில்லியன் ரூபா செலவில் அப்துல் மஜீத் மண்டமாக பெயர் மாற்றி புனரமைப்புச் செய்யப்பட்டது,

கல்லரிச்சல், கைகாட்டி சந்தி முதல் வங்களாவடி முதல் மஜீத் புரம் வரையிலான மணல் வீதிகள் தார் வீதிகளாக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து 2008 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தோல்வி பின்னர் 2012 இல் இடம்பெற்ற மகாண சபைத்தேர்தலில் வெற்றி பெற்று கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சரானார். இந்த அமைச்சின் மூலம் சம்மாந்துறை கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைக்குப் பதிலாக மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாகத் தரமுயர்த்தி தனியான கட்டடம் அமைத்தல், பல கோடி ரூபாய் செலவில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி செய்தல், கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகள், நிருவாக கட்டமைப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளைச் செய்துள்ளார்.

அதன் பின்னர், 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகி அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரானார். சம்மாந்துறையில் ஆடைத்தொழிற்சாலை, உயர் தொழிற்நுட்ப கல்வி நிறுவனத்திற்கான நிரந்தரக் கட்டடத்தில் நிர்மாணித்தல், கிராமிய பாலங்கள் நிர்மாணித்தல், கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்துறைகளிலும் அபிவிருத்திகளைச் செய்துள்ளார்.

பிரதேச சபை என்றாலும் மன்சூர் தான். மகாண சபை என்றாலும் மன்சூர் தான். பாராளுமன்றம் என்றாலும் மன்சூர் தான். எல்லாவற்றிலும் அவருக்குத்தான் ஆசை என அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், துணிவுகரமாக நின்றனால் தான் 34 வருடங்களுக்கும் மேலாக சம்மாந்துறையில் முஸ்லிம் காங்கிரஸின் நிலை பெற்றிருக்கக் காரணமென்பது யாருக்கும் தெரியாத விடயமல்ல.

சம்மாந்துறை மூலம் முஸ்லிம் காங்கிரஸின் சக்தியை உணரச்செய்திருக்கின்றார். அத்துடன், படிப்படியாக பலருக்கும் முஸ்லிம் காங்கிரஸுடாக அரசியல் அங்கீகாரத்தை விட்டுக் கொடுத்திருக்கின்றார். இனி மேல் பிரதேச சபைக்கு இறங்குவாரா? விட்டுக் கொடுத்திருக்கின்றார். மாகாண சபைக்கு இறங்குவாரா? விட்டுக் கொடுத்திருக்கின்றார். குறிப்பாக, மர்ஹூம் முன்னாள் பா.உ. யூ.எல்.எம். முகைதீன் ஐ விட மு.கா அனுபவம் கூடியவர் மன்சூர். 1994இல் தனக்கான சீட் வேண்டுமென்று போராடாமல் அவருக்காக விட்டுக் கொடுத்துள்ளார். 2001 இல் மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் விட மு.காங்கிரஸின் அனுபவம் கூடியவர்தான் மன்சூர் எம்.பி. திருவுளச்சீட்டில் தனக்கு இடம் கிடைத்ததை ஊர் அறிந்தும் அவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்று ஊர், பள்ளி நிருவாகம் எடுத்த முடிவுக்கு மதிப்பளித்து, அவருக்காக விட்டுக்கொடுத்தார்.
2004 இல் ஏ.எம்.எம்.நௌஷாத் (முன்னாள் பா.உ) அவர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போது தனக்கு மட்டும் தான் சீட் வேண்டுமென்று முனையாமல் தலைமைத்திற்கு மதிப்பளித்து தானும் தோல்வியடைந்திருந்தாலும் அவருக்கான விட்டுக்கொடுத்தார்.

அதே போன்று, கிழக்கு மகாண சபையின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர் அவர்களும் மு.கா. கட்சியுடன் இணைந்தமைக்காக மாகாண சபைக்கு மு.கா. உறுப்புரிமை வர வேண்டும். எனக்கருதி அவருக்கும் விட்டுக் கொடுத்தவர்தான் முன்னாள் எம்.பி. மன்சூர் என்பதனை மறந்து விட முடியாது.

மன்சூர் எம்.பி. மிகவும் துணிச்சலானவர். சாதிப்பதில் வெறி கொண்டவர். தனது தைரியத்தால் எதையும் வெல்லக்கூடியவர். ஆளுமை நிறைந்தவர். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள அவலங்களையும் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களையும் எதிர்கொண்டுள்ள ஏமாற்றங்களையும் மிக ஆக்ரோஷமான முறையில் கர்ஜித்த மன்சூரின் துணிச்சல் பாராட்டத்தக்கது.

வெறும் திண்ணப்பேச்சு நடத்தும் முஸ்லிம் அரசியலிருந்து வேறுபட்டு மக்களுக்கான அரசியலை நடத்தும் சமூகப்போராளி. மாலைகளுக்கு மாத்திரம் கழுத்தை வளைத்துக்கொடுத்து மன மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளும் அரசியல்வாதியல்ல.

மன்சூர் எம்.பி. முஸ்லிம் சமூகத்தின் துடிப்புள்ள பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் ஒரு போதும் பாராளுமன்றக் கௌரவத்தை மாசுபடுத்தவில்லை. ஒரு போதும் கட்சி விட்டு கட்சி மாறவில்லை. ஒரு போதும் விலை போகவுமில்லை.

மாமனிதர் அஷ்ரஃப் அவர்களுடன் ரணங்களையும் கணங்களையும் பங்கு போட்டுக்கொண்ட போராளி ஒருவனின் சமூகம் சார்ந்த உணர்வு, அதன் வெளிப்பாடுகள் எப்படியிருக்க வேண்டுமென்பதனை தெட்டத் தெளிவாக கடந்த கால பாராளுமன்ற அமர்வுகளில் சமூகத்திற்காக ஆக்ரோசமாக உரை நிகழ்த்தி வெளிக்காட்டியுள்ளார். முன்னாள் பா.உ.மன்சூர்.

தெளிவான குறிக்கோளுடன் ஒருவன் செயற்படும் போது அவன் நிச்சயமாக தொடை நடுங்கியாக இருக்கமாட்டான். துணிச்சலுடன் செயற்படுவான் என்பதனை கடந்த காலங்களில் மன்சூர் நிறுபித்துக் காட்டியுள்ளார்.

1986 இல் அரசியலில் காலூன்ற முஸ்லிம் சமூகத்திற்கான தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள முன்னாள் எம்.பி. மன்சூர் பல போராட்டங்கள், உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் கட்சிக்காக 18 நீதிமன்ற வழக்குகளை சந்தித்தல் உள்ளிட்ட பலதையும் எதிர்கொண்டு அரசியல் மூலம் முஸ்லிம் சமூகத்திற்காக குறிப்பாக, சம்மாந்துறை தாயின் உயர்வுக்காக தனது பட்டப்படிப்பு, சுங்கத்திணைக்களத்தின் உயர் பதவியையும் தியாகம் செய்து தான் அரசியலில் எதிர் நீச்சல் போட்டு இன்று வரை பயணிக்கின்றார்.

அறிவு, ஆற்றல், ஆளுமை, போராட்டக்குணம், யாருக்கும் பயமில்லாமல் தற்’துணிவு மனதில் பட்டத்தை நேரே பேசும் குணம், விமர்சனங்கள் ஆயிரம் வந்தாலும் தனக்கு எது சரி என்று தோன்றுகின்றதோ, அதனை தைரியமாகச் செய்யும் வல்லமை, துணிச்சலுடன் பிரச்சினைகளை அணுகி ஆராயும் தன்மை, சவால்களைக் கண்டு பின்வாங்காத ஆளுமை, நிதானமும், ஆனுபவமும் கொண்ட ஆளுமை தான் முன்னாள் பா.உ.மன்சூர்.

எனவே, எதிர்வருகின்ற பாராளுமன்றம் பெரும்பான்மை ஆதிக்கவாதத்தை நிலைநிறுத்துகின்ற மத்திய மையமாக அமையவுள்ளதுடன், சிறுபான்மை மக்களுக்கு ஒரு சவாலான காலமாகவும் அமையவுள்ளது.

அமையவுள்ள பாராளுமன்றத்தில் சமூகத்திற்காக பயமில்லாமல் தைரியமாக குரல் கொடுக்கக்கூடிய மன்சூர் மீண்டும் தெரிவு செய்யப்பட வேண்டும். அதற்கு அம்பாறை மாவட்ட மக்களின் முதல் தெரிவாக மன்சூராக இருக்க வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed