Main Menu

சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்குறாணை மாதுறுஓயா ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரம் மற்றும் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்குறாணை, மாதுறுஓயா ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரம் மற்றும் ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினரால் கைப்பற்றப்பட்ட மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரம் மற்றும் ஐந்து சந்தேக நபர்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறுபட்ட சட்டவிரோதச்செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இதனைத்தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளைக் கைது செய்யும் வகையிலும் பொலிஸார், விசேட அதிரடிப்படைப் படையினர் மற்றும் இராணுவப் புலனாய்வுப்பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed