Main Menu

நாவிதன்வெளியில் இரு வீடுகள் கையளிப்பு

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான “உங்களுக்கு வீடு, நாட்டுக்கு எதிர்காலம்” வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில் முதற்கட்டமாக மத்திய முகாம் -3 , அன்னமலை -2 ஆகிய பிரதேசங்களில் பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளும் இன்று (26) வைபவ ரீதியாகக் கையளிக்கப்பட்டது.

இவ்வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விரு வீடுகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ், தலா ஒரு வீடும் ஆறு இலட்சம் ரூபா செலவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவ்வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ் தலா ஒரு வீட்டிற்கு ஆறு இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நடப்பட்டு, இவ்வீடுகள் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில் முதற்கட்டமாக மத்திய முகாம் -3, அன்னமலை -2 ஆகிய பிரதேசங்களில் இரு பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது.

நிரந்தர வீடில்லாத, வறுமைக்கோட்டின் கீழுள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக்குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்துக் கொடுக்கும் அரசின் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வீடு குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிப்ர வீ.ஜெகதீஸன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க, கல்முனை மேலதிக முகாமையாளர் ஏ.எம் இப்ராஹிம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சம்மாந்துறை தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எம்.டி.எ.றஹ்மான், யு.எல்.எம்.அபூபக்கர் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவையாளர்கள், பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed