Main Menu

ஹெரோயினுடன் இருவரைக் கைது செய்துள்ளோம் – வாழைச்சேனை பொலிஸ்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் வெவ்வேறு இடங்களில் 2440 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ஓட்டமாவடி முன்றாம் வட்டாரத்தில் பரிதா பேக்கரி வீதியில் வசிக்கும் 33 வயதுடைய பிரபல்ய போதைப்பொருள் வியாபாரியிடமிருந்து 1280 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் பரிகாரியார் வீதியில் வசிக்கும் 29 வயதுடைய நபரிடமிருந்து 1160 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைத்தடுப்புப்பிரிவு பொலிஸ் பரிசோதகர் துசிதகுமார தலைமையில் போதைத்தடுப்புப் பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹா குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஹெரோயின், போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா உட்பட்ட போதைப்பொருட்கள் அதிகம் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed