Main Menu

பிறைந்துறைச்சேனை வட்டாரக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பு

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை 206சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக்குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு வட்டாரக்குழுத்தலைவர் நாஸர் தலைமையில் ஓட்டமாவடி ஸ்மையில் சென்றரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு தேர்தல் தொடர்பாக விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, உறுப்பினர் ஏ.எம்.நௌபர், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.தையூப் ஆசிரியர், சட்டத்தரணி எம்.எம்.ராசிக், மத்திய குழுச்செயலாளர் ஏ.அக்பர் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed