Main Menu

களுவாமடுவில் “சமகால அரசியலும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் எதிர்நோக்கும் சவால்களும்” விஷேட கலந்துரையாடல்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீராவோடை வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் களுவாமடு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “சமகால அரசியலும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் எதிர்நோக்கும் சவால்களும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் இடம்பெறற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு “சமகால அரசியலும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் உரையாற்றினார்.

இதில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம்.நௌபர், ஏ.ஜி.அமீர் ஆசிரியர், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மற்றும் வட்டாரக்குழுத்தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீராவோடை வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் பகற்போசனமும் ஏறபாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed