Main Menu

பொதுஜன பெரமுனவின் வெற்றியிலும் எனது வெற்றியிலும் பங்காளிகளாக மாறுங்கள் – றிஸ்லி முஸ்தபா

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எம்.என்.எம்.அப்ராஸ்)
மக்களுக்கு துரநோக்குள்ள சேவையைச்செய்யவே தேர்தலில் குதித்தேன். நான் உங்களுக்காக என்றும் பணியாற்றத்தயாராக இருக்கிறேன். மேலும் இந்தத்தேர்தலானது, எமது சமூகத்திற்கு முக்கியமானதொன்றாகும்.

இதன் வெற்றியில் நாமும் பங்காளராய் வர வேண்டும். கடந்த காலத்தில் யுத்ததை ஒழித்தது மாத்திரமல்லாமல், நாட்டை அபிவிருத்திப் பாதையில் ஈட்டுச்சென்றது மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலாகும். தேர்தல் வெற்றியின் பின் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமே ஆட்சி செய்வது உறுதியாகி விட்டதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் திகாமடுள்ள மாவட்டடத்தில்
இலக்கம் 06 இல் போட்டியிடும் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

கல்முனையிலுள்ள அவரது இல்லத்தில் வெள்ளியன்று இரவு (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், எனது வெற்றியை திகாமட்டுள்ள மாவட்டத்தில் உறுதிப்படுத்த பலர் என்னுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 4 ஆசனங்களைப் பெறுவது உறுதியாகியுள்ளது.

இதில் நானும் இறைவனின் துணையுடன் வெற்றி பெறுவேன். நீங்களும் பொதுஜன பெரமுனவின் வெற்றியிலும் எனது வெற்றியிலும் ஒட்டு மொத்த பங்காளிகளாக மாறுங்கள் என்றார்.

இவர் முன்னாள் உயர் கல்விப்பிரதியமைச்சர் மாயோன் முஸ்தபாவின் புதல்வரென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed