Main Menu

பாடசாலைகளை மீளத்திறக்க சிரமதானப்பணி

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஐ.எல்.எம்.நாஸிம்
Covid 19 இனால் முழு நாடும் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பொருளாதாரம் மட்டுமன்றி, ஏனைய நடவடிக்கைகளைச்சீரமைக்கும் வகையில் தற்போது அனைத்துப் பணிகளும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், பாடசாலைகளை மீளத்திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அமைப்பின் தலைமையில் சிரமதான நிகழ்வு கடந்த 26ம் திகதி இடம்பெற்றது. இச்சிரமதானப் பணிக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உட்பட சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed