Main Menu

பாடசாலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

(றாசிக் நபாயிஸ்)
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று திங்கட்கிழமை (29.06.2020) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு கல்வியமைச்சு வெளியிட்டுள்ள பாடசாலைகளின் சுற்றுப்புறச்சூழலைச்சுத்தப்படுத்துதல்” வேலைத்திட்டத்திற்கமைய தற்போது பாடசாலைகளைச்சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்றன.

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய நீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலயத்தின் சுற்றுப்புறச்சூழல் மற்றும் வகுப்பறைகளைச்சுத்தம் செய்யும் நிகழ்வு நேற்று (28.06.2020 ) பாடசாலையின் அதிபர் எம்.எம்.எம்.நியாஸ் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலையின் பழைய மாணவர்கள், சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டு பாடசாலையைச்சுத்தம் செய்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed