Main Menu

நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கொழிப்பு நடவடிக்கை

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
நிந்தவூர் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் டெங்கொழிப்பு நடவடிக்கை நேற்று காலை முதல் வீடுகள், கல்வி நிலையங்கள் என்பனவற்றில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லீமா பஸீர் கள நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து இனங்காணப்பட்ட இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டெங்கொழிப்பு நடவடிக்கைகளில் 1210 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது. நுளம்பு பரவலில் இனங்காணப்பட்ட 32 பேருக்கு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 68 பேருக்கெதிராக சிவப்பு அறிக்கை வழங்கப்பட்டது. டெங்கு நுளம்பு பரவக்கூடிய 326 இடங்கள் அடையாளங்காணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், நுளம்புக்கட்டுப்பாட்டு பணியாளர்கள் நிகழ்வுகளின் பின்னர் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் டெங்கு நுளம்பு பரவலைத்தடுக்கும் நடைமுறையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தெளிவுபடுத்தினர்.

பிராந்திய மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர், மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed