Main Menu

இலஞ்சம், ஊழல், மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டுக்கொல்வேன் – எம்.சி.ஆதம்பாவா

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
இலஞ்சம், ஊழல், மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டுக்கொல்வேன் என அம்பாறையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்த சுயேட்சைக்குழுவின் அரசியல் புரட்சிகர முன்னணி இஸ்தாபக செயலாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.சி.ஆதம் பாவா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் சீப்பு சின்னத்தில் சுயேட்சைக்குழு-2 போட்டியிடும் அணி தனது தேர்தல் கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவர் தானிஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் சாய்ந்தமருது பேள்ஸ் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) நடாத்தியது.

இதன் போது, குறித்த அணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்த அரசியல் புரட்சிகர முன்னணி இஸ்தாபகச் செயலாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.சி.ஆதம் பாவா தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
புதிய தோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். தேசத்தை நோக்கிய புரட்சிப்பயணம் என்ற வாசகத்தை தாங்கிய நிலையில் இத்தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தில் பிழையுள்ளது. எமது விஞ்ஞானத்தில் உள்ளத்திற்கு மாறாக நாங்கள் நடந்தால் எங்களைச்சுட்டுக் கொல்லலாம்.

நாங்கள் கடந்த காலங்களில் அரசியல், சமூக, சமய விடயங்களாக இருக்கலாம். இதில் பிழை விடாத என் தலைமையில் அதே பாணியில் பாதையிலும் தான் எல்லோருடைய சேவைகளும் இனி அமையும். அம்பாறை மாவட்டத்தை 12 பகுதிகளாகப்பிரித்து அங்கு தலைமைத்துவத்தை உருவாக்கி, அவர்கள் மக்கள் செயற்பாடுளில் ஈடுபடுவர். அவர்கள் இலஞ்சம், ஊழல், மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால், நானே சுட்டுக்கொல்வேன். நாங்கள் வாக்களிக்க பணம் கொடுக்கமாட்டோம்.

ஆனால், பணம் படைத்த வேட்பாளர்கள் தரும் பணத்தைப் பெற்று எமக்கு வாக்களியுங்கள். ஒவ்வொரு வேட்பாளர்களினதும் கடந்த காலச்செயற்பாடுகளைச்சிந்தித்து காலைப்பிடித்து கெஞ்சிக் கேட்கிறேன். எமக்கு வாக்களியுங்கள் எனக்குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed