Main Menu

பிரதேச சபை உறுப்பினர் அஸ்மியினால் மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்தில் கை கழுவ ஏற்பாடு

இந்த செய்தியைப் பகிர்க >>>

கொரோனா அச்சறுத்தல் காரணமாக நாடு இஸ்தம்பிதமடைந்து அரச, அரச சார்பற்ற தனியார் நிறுவனங்கள் பாடசாலைகள், தனியார் கல்விக்கூடங்கள் மாதக்கணக்கில் மூடத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க அரசு நடவடிக்கை மேற்கொடுள்ளது.

பாடசாலைகள் திறக்கப்படுகின்ற போது கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க அரசும் கல்வியமைச்சும் பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு சுற்றுநிரூபங்களை அறிவித்தல்களையும் வெளியிட்டுள்ளதுடன், கைகளை கழுவுவதனூடாக கொரோனாவிலிருந்து பாதுகாப்புப் பெற வழி வகுக்கும் என்ற அடிப்படையில் பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்கள் கைகளை கழுவத் தேவையான ஏற்பாடுகளை பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடரில், மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலய மாணவர்களின் நன்மை கருதி பாடசாலையின் அதிபர் யூ.எல்.ஸல்மானுல் ஹாரீஸ் அவர்களின் வேண்டுகோளின் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி அவர்களின் முயற்சியினால் பாடசாலை வளாகத்தில் ஐந்து இடங்களில் கை கழுவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த இடங்களில் குழாய் மூலமான நீர் வசதியுடன் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் கைகளைக் கழுவுகின்ற போது சீருடைகளைப் பாதுகாக்கும் வகையில் சிறப்பான முறையில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கை கழுவும் வசதியை ஏற்பாடு செய்த தந்த பிரதேச சபை உறுப்பினருக்கு பிரதேச மக்கள் மற்றும் பாடசாலை சமூகம் சார்பாக பாடசாலையின் அதிபர் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்.

அத்துடன், பிரதேச கல்வி வளர்ச்சியை நோக்காகக் கொண்டு இப்பாடசாலையின் வளர்ச்சியில் அதிபர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி அவர்களும் தன்னாலான முழு பங்களைப்புக்கள், முயற்சிகள், ஒத்துழைப்புகளையும் வாழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed