Main Menu

சம்மாந்துறை பிரதேச சபையினால் சௌபாக்கியா பயிர்ச்செய்கைத் திட்டத்திற்கு 1500 கிலோ சேதனப்பசளை இலவசமாக வழங்கி வைப்பு

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணற்கருவிற்கமைய மேற்கொள்ளப்படும் சௌபாக்கியா பயிர்ச்செய்கைத் திட்டத்திற்கு பங்களிப்பாக சம்மாந்துறை பிரதேச சபையினால் உற்பத்தி செய்யப்படும் சேதனப்பசளையின் 1500 கிலோவினை இலவசமாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவிடம் பிரதேச செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இதில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.மஜீட், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.பாறூக், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல்.எம்.சலீம், நிர்வாக உத்தியோகத்தர் (கிராமசேவக) எம்.ரீ.தாஸீம், சமூக சேவைகள் பிரிவுப்பொறுப்பு உத்தியோகத்தர் மாஹிர் உள்ளிட்ட பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed