Main Menu

இழி அரசியலை முன்னெடுக்கும் சாராரின் தோல்வியை மறைக்க முன்னெடுக்கப்படும் செயற்பாடு – இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது அஸீம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாம் ஆதரிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஹபீப் றிபானின் வெற்றியினை சகித்துக்கொள்ள முடியாமலும், கல்குடாவின் ஊழலற்ற சிறந்ததொரு சமூகத்தை உருவாக்க எத்தனிக்கும் எமக்கு சேறு பூசுவதற்காகவும், இழி அரசியலை முன்னெடுக்கும் சாரார் தங்களின் தோல்வியினை மறைப்பதற்காவுமே இவ்வாறான செயரற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் செயற்பாட்டாளருமான எம்.எச்.முஹம்மது அஸீம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக தனக்கெதிராக கல்குடாத்தொகு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஹபீப் றிபான் தரக்குறைவாக எதிரணையினரால் வைரலாக்கப்பட்டுள்ள ஓடியோ ஒலிப்பதிவு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் சகோதரர் றிபானின் குரல் பதிவொன்றை பலவாறாக மிக மோசமாகச் சித்தரித்து, தமது கீழ்த்தரமான அரசியல் முன்னெடுப்பை மேற்கொள்ளும் செயற்பாடுகளைக்கண்டு வேதனையடைகின்றேன்.

கல்குடாவில் தசாப்தகால அரசியல் செய்தவர்கள் இவ்வாறான ஒலிப்பதிவுகளை வைத்து வாக்கும் கேட்கும் நிலைக்கு சென்றுள்ளதை எண்ணி கவலையடைகின்றேன். அதற்கு மிகவும் அநாகரீகமான பின்னூட்டங்களை இடும் ஆதரவாளர்களையே உங்கள் அரசியல் கலாசாரம் வளர்த்து விட்டுள்ளது என்பதை இத்தருணத்தில் கல்குடா சமூகம் உணர்ந்துள்ளது. இதனை உணர்ந்து எமது அணியின் பக்கம் கல்குடா முஸ்லிம் சமூகம் சாய்வதைத் தடுக்கலாம் என்பது முடியாத காரியமாகும்.

சம்பந்தப்பட்ட குரல் பதிவைப்பதிவு செய்தவர்களுக்கும், எம்மைப்படைத்து பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ்வுக்கும் எனக்கும் சகோதரர் றிபான் அவர்களுக்கும் அவ்விடத்தில் என்ன நடந்தது என்பது நன்கு தெரியும்.

அவ்வார்த்தைப் பிரயோகம் ஓர் உதராணத்திற்காக மேற்கோள்காட்ட எத்தனித்த தருணத்தில் பிழையானதொரு தொணியில் தவறுதலாக வெளிப்பட்டதேயன்றி, என்னைத் தரக்குறைவாக சுட்டிக்காட்டவோ, விமர்சிக்கவோ அல்லது இட்டுக்கட்டி இழிவுபடுத்தவோ அல்ல என்பதனை எனதன்புமிக்க நண்பர்களும் சகோதரர்களும் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதை வினையமாக வேண்டிக் கொள்கின்றேன்.

அதே நேரம், தற்செயலாக சொல்லப்பட்ட வார்த்தைப் பிரயோகத்தை தவறான அர்த்தத்தில் திரிவுபடுத்தி வாக்கு கேட்கும் வேட்பாளரின் ஆதரவாளர்களே, நீங்கள் ஆதரிக்கும் வேட்பாளரின் கடந்த கால வாக்கு வங்கியில் சரிவுக்கு அவரின் நாகரீகமற்ற அணுகுமுறையும் வார்த்தைப் பிரயோகங்களும் தான் காரணம் என்பதை உங்களுக்கு நான் சொல்லித்தான் புரிய வேண்டியதில்லை.

நீங்கள் ஆதரிக்கும் வேட்பாளர் பேசிய ஷிர்க்கான, சொல்லக்கூடாத, சொல்வதற்கே நா கூசும் வார்த்தைப் பிரயோகங்களை விடவும் எமது வேட்பாளர் றிபான் அநாகரீகமாக எதனையும் கூறிவிடவில்லை.

மேலும், எமது வேட்பாளரின் வெற்றியினைச் சகித்துக்கொள்ள முடியாமலும், தங்களது தோல்விப் பயத்த மறைப்பதற்கும் கல்குடாவின் ஊழலற்ற சிறந்ததொரு சமூகத்தை உருவாக்க எத்தனிக்கும் எமக்கு சேறு பூசுவதற்காகவுமே இவ்வாறான இழி அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

சகோதரர் சட்டத்தரணி ஹபீப் றிபானைப் போன்று இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் எந்த எதிர்பார்ப்புமின்றி எனது வெற்றிக்காக உழைத்த பல நல்லுள்ளங்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்றும் நன்றியுள்ளவனாய் இருப்பேன் என்பதுடன், இன்ஸாஅல்லாஹ் இந்தத்தேர்தல் முடிந்த பிற்பாடு அரசியல் பக்கச்சார்பில்லாமல் அனைத்து இளைஞர்களையும் இணைத்து இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தயாராகவுள்ளேன் என்பதையும் உங்கள் முன் எத்திவைக்கின்றேன்.

இவற்றைப் பொருட்படுத்தாது, எமது வெற்றிப் பயணத்தில் அனைத்து நண்பர்களும், சகோதரர்களும் மற்றும் போராளிகளும் இணைந்து பயணிக்குமாறு தயவாய்க் வேண்டிக் கொள்கின்றேன்!

இழிவுபடுத்த வேண்டுமென்ற நோக்குடன் பகிரப்படும் பதிவுகளைக்கண்டு நாம் சோர்வடையப் போவதில்லை. வல்ல அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன். அவனின் திருப்பொருத்தத்திற்காய் நாம் ஒன்றிணைந்து வெற்றியை தமதாக்கிக் கொள்வோம். ஒன்றுபடுவோம்!

‘இந்த போராட்டத்தில் சூடுன்டாலும் வெட்டுண்டாலும் சுகமெல்லாம் ஒன்றே தான்…..’ என்ற மாமணிதரின் வார்த்தைகளை உங்களுக்கு ஞாபமூட்டுகின்றேன் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed