Main Menu

டெங்கினைக் கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை நடவடிக்கை

இந்த செய்தியைப் பகிர்க >>>

கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்ட ஓட்டமாவடி – 3 வாட் பிரதேசத்தில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தவிசாளர் யூ.எல்.அஹமட் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.

இதன் தொடரில் இப்பிரதேசங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கும் மற்றும் மண் நிறைந்து கழிவு நீர் வடிந்தோட முடியாமல் காணப்படும் வடிகான்களைத்துப்புரவு செய்வதுடன், மூடிகள் இடப்படாத, சேதமடைந்த வடிகான்களுக்கு மூடிகளை இடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பிரதேசங்களுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு மக்களின் வேண்டுகோள்களை விசாரித்து அதற்கான தீர்வுகளை வழங்க மும்முரமாக முயற்சிகளை தவிசாளர் மேற்கொண்டு வருவதுடன், டெங்கு அபாயமுள்ள பிரதேசங்களில் புகை விசிறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் காலடிக்குச்சென்று இவ்வாறான பணிகளை மேற்கொண்டு வரும் தவிசாளருக்கு பிரதேச மக்கள் தமது நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, டெங்கின் தாக்கத்தை இல்லாதொழிக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரத்துறையினருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் யூ.எல்.அஹமட் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed