Main Menu

முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியுடன் இணைவு

இந்த செய்தியைப் பகிர்க >>>

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் மீராவோடை மேற்கு வட்டார முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியுடன் இணைந்து கொண்டார்.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை ஆதரித்து நேற்று 26.07.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு கப்பல் ஹாஜியார் சந்தி, செம்மண்ணோடையில் இடம்பெற்ற பிரம்மணடான தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அதிகளவான ஆதரவாளர்களுக்கு மத்தியில் இணைந்து கொண்டார்.

இளம் பிறை விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, முன்னாள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தவிசாளர்களான கே.பி.எஸ்.ஹமீட், ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டாரக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் மீராவோடை மேற்கு வட்டார முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான சுயேட்சை அணியில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குளைப் பெற்றுக்கொண்டவர். இவர் கடந்த 18.03.2020ம் திகதி பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed