Main Menu

‘எழுச்சி பெறும் கல்குடா’ ஒப்பந்தம் கைச்சாத்து

இந்த செய்தியைப் பகிர்க >>>

‘எழுச்சி பெறும் கல்குடா’ ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் நேற்று 26.07.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி எம்.பி.சீ.எஸ்.வீதியில் அல் கிம்மா சமூக சேவைகள் காரியாலத்தின் முன்னாள் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் யூ.எல்.அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இவ்வொப்பந்தத்தில் கல்குடாவின் எதிர்கால அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு சுமார் 28 அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் வெற்றி பெறுகின்ற பட்சத்தில் குறித்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் ஐந்தாண்டுகளுக்குள் பூரணப்படடுத்தப்பட்டு நவீன கல்குடாவாக மிளிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி, மீன்பிடி, விவசாயம், சமூகவியல்துறை சார்ந்த கல்குடாவின் ஒட்டுமொத்த தேவைகளும் உள்ளடக்கப்பட்ட ஒப்பந்தமாக இது அமைந்துள்ளதுடன், கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதிகள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

கைச்சாத்திடப்பட்ட குறித்த ‘எழுச்சி பெறும் கல்குடா’ ஒப்பந்தத்தில் கல்குடாத்தொகுதிக்கான நுழைவாயிலினை அழகுபடுத்தல், காணி, நிர்வாகப்பிரச்சினைக்கு தீர்வுகள், கல்வி அபிவிருத்தி, கல்வி நிருவாகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு, சுகாரத்துறையில் காணப்படும் குறைபாடுகளுக்கு தீர்வு, தொழிற்பயிற்சி நிலையங்களை நிறுவுதல், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதலும், அதிகரித்தலும், வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை மேன்படுத்த சுயதொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல், விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த திட்டம், கலாசார, சமூகப்பிரச்சினைக்கு தீர்வு, மீனவர் சமூகத்தின் பிரச்சினைக்குத்தீர்வு, கல்குடாவில் நிரந்தர அரசியல் பணிமனை போன்ற முக்கிய விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ்வொப்பந்தத்தில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் முதலில் கையொப்பமிட கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் யூ.எல்.அஹமட், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி, கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர், மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் சம்மேளனத் தலைவர் ஏ.சீ.எம்.முனவ்வர், அக்குரானை அல் ஹிலால் கமநல அமைப்பின் செயலாளர் ஏ.எச்.நுபைல், காவத்தமுனை கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் எம்.என்.எம்.ஷியாம் மெளலவி, மினுமினுத்தவெளி விவசாய அமைப்பின் தலைவர் ஏ.பி.முஸ்தபா, மினுமினுத்தவெளி விவசாய அமைப்பின் உப தலைவர் ஏ/ஆதம் லெப்பை ஆகியோர் கையொப்பமிட்டனர்.

ஏனைய அதிதிகளாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி, அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளரும் முன்னாள் ஆளுனரின் தேர்தல் இணைப்பாளருமான அஷ்ஷெய்க் ஹாரூன் ஸஹ்வி, கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed