Main Menu

முன்னாள் முதல்வர் சிராஸின் சொந்த நிதியில் சாய்ந்தமருது மைதானத்திற்கு சுற்றுவேலி

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எஸ்.அஷ்ரப்கான்)
சாய்ந்தமருது விளையாட்டு மைதாணத்தை செப்பனிட்டு அதற்கு சுற்று வேலியமைத்துத்தருமாறு சாய்ந்தமருது விளையாட்டுக்கழக சம்மேளனம் விடுத்த வேண்டுகோளையடுத்து, அதனையேற்றுக்கொண்ட முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது சொந்த நிதியில் இதனை செப்பனிட்டு வழங்கினார்.

அத்துடன், தான் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக தற்பொழுது மைதானத்தைச்சுற்றி வேலியமைக்கும் பணி இடம்பெறுகின்றது.

விளையாட்டுக்கழக சம்மேளன உறுப்பினர்கள் முன்னாள் முதல்வரின் இல்லம் வந்து இதனைப் பார்வையிடுமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைய கடந்த 29.07.2020ம் திகதி புதன்கிழமை இம்மைதானத்தைப் பார்வையிட்டதோடு, இதன் முன்பகுதியைப் பூரணப்படுத்த மேலும் நிதி தேவைப்படுவதாக விடுத்த வேண்டுகோளுக்கமைவாக அதனை தான் செய்து தருவதாக வாக்குறுதி வழங்கியதோடு, உடனடியாக அதனை செய்து கொடுக்குமாறு தனது செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed