Main Menu

முஸ்லிம் காங்கிரஸ் தலைமை காட்டிக்கொடுக்கும் வேலைகளையே செய்தது – அதாஉல்லாஹ் சாடல்

இந்த செய்தியைப் பகிர்க >>>

(றாசிக் நபாயிஸ்)
‘நமது மண்ணின் வாசனை, நமது மக்களின் பிரச்சினை, நாம் அனுபவித்த துன்பங்கள், இடர்பாடுகள், சோதனைகள், வேதனைகள், அதனால் உருவாக்கப்பட்ட நமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அதன் ஆளுமையான தலைமை எல்லாவற்றையும் கூடவே இருந்து அனுபவித்தவர்கள் நாங்கள். அந்த தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை காட்டிக்கொடுக்கும், கூட்டிக்கொடுக்கும் வேலைகளையே செய்தது.

இதனைப்பொறுத்துக் கொள்ள முடியாத இளைஞர்கள் ஒன்றிணைந்து என்னோடு சேர்த்து தேசிய காங்கிரசை உருவாக்கி, அந்தத்தலைவன் அஷ்ரபின் கொள்கைகள் அணுவளவும் பிசகா வண்ணம் செயற்படுத்தி வருகிறோம்.

இப்போது நடைபெறப்போகின்ற தேர்தலானது, நமது தலைவிதியைத்தீர்மானிக்கின்ற, நமது மக்களின் வாழ்விடம், இருப்பு, நாட்டின் பொருளாதாரம், சுபீட்சம் போன்றவைகளைத் தீர்மானிக்கின்ற தேர்தலாகும். இதில் நாம் சிந்தித்துச்செயற்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் தேசிய காங்கிரஸ் தேசியத்தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் நிந்தவூர் வெளவாலோடை பிர்தெளஸ் ஜும்ஆப்பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed