Main Menu

ஹெலிகொப்டர் டொலிபோனுக்கு ஆதரவு

இந்த செய்தியைப் பகிர்க >>>

(றாசிக் நபாயிஸ்)
கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கல்முனைத்தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு -3 (ஹெலிகொப்டர் சின்னம்) இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கத்தீர்மானம்.

கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கல்முனைத்தொகுதியில் ஹெலிகப்டர் சின்னம் சுயேட்சைக்குழு -3 யில்
போட்டியிட்ட குழுவானது இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியை (டொலிபோன் சின்னத்தை) ஆதரிப்பதாக தீர்மானித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கல்முனைத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்ட இக்குழு இம்முறை அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி டெலிபோன் சின்னத்தை ஆதரிப்பதாக தீர்மானித்துள்ளதாக சுயேட்சைக்குழுவின் தலைமை வேட்பாளர் எம்.எச்.எம்.றைசூல் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பல சமூக சேவைகளைச்செய்த எங்களுக்கு சிறந்த பெறுமானமாக கடந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் கல்முனை மாநகர சபையின் 5 ஆம் வட்டாரத்தில் ஒரு ஆசனம் கிடைத்தது. இதன் மூலம் பல சமூக சேவைகளைச் செய்து வரும் நாங்கள், இத்தேர்தலில் டெலிபோன் சின்னத்தில் கல்முனைத்தேர்தல் தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களையும் ஏனைய இரண்டு பேரையும் ஆதரிப்பதாகத் தீர்மானித்துள்ளோம் என மேலும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed