Main Menu

சகல இன மக்களுக்கு ஒற்றுமையுடன் வாழ இத்தியாகத்திருநாள் அடித்தளமாக அமையட்டும் – ஆரிப் சம்சுதீன்

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எம்.என்.எம்.அப்ராஸ்)
உலகளாவிய ரீதியில் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஹஜ்ஜூப்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன்.

இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடாக இந்த ஹஜ் தினம் நினைவுபடுத்தப்படுகிறது. தியாகத்தின் வரலாறு எமக்கு நல்ல பாடத்தைப் புகட்டுவதாகவும்,சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ இத்தியாகத் திருநாளான ஹஜ்ஜுப்பெருநாள் அமையட்டுமென முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து, சுகாதர நடைமுறைகளைப்பேணி ஹஜ்ஜுப்பெருநாளை நிறைவான பிரார்த்தனையுன் கொண்டாடுவோம். மேலும், நாட்டின் நிலைமை சீரடைந்து முற்றிலும் இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்ப பிரார்த்திப்பதுடன், தியாகப்பெருநாள் தினத்தில் நாம் எல்லோரும் ஹஜ்ஜுக்குரித்தான புனிதத்தன்மையை உணர்ந்து எம்மிடையே காணப்படும் வேற்றுமையைக் களைந்து, அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக ஒற்றுமையுடன் சகிப்புத்தன்மையுடன் வாழ வேண்டும். இத்தினத்தில் உள்ளம் நிறைந்த திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed