Main Menu

நாடாளுமன்றில் தூங்குகின்றவர்களை தெரிவுகளாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் – ஏ.எல்.தவம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

(றாசிக் நபாயிஸ் & எஸ்.அஷ்ரப்கான்)
தேர்தல் முடிந்த கையோடு தூங்குவோம் என நினைத்து தூங்குகின்ற யாராக இருந்தாலும், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், அவர்களை உங்களுடைய தெரிவுகளாக ஆக்கிக்கொள்ள வேண்டாமென திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல்.தவம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றுகையில்,
வருகின்ற தேர்தல் உறங்குகின்ற தேர்தல் அல்ல, வருகின்ற பாராளுமன்றத்தில் யாராக இருந்தாலும் நினைத்தவாறு செய்யப்பட்டாலும், அது கருத்தியல் யுத்த களமாக இருக்கப் போகிறது.

ஆகவே, இந்த கருத்தியல் யுத்த களத்தில் நமது முஸ்லிம் இனம் தொடர்பாக கூரிய வாள்களாக இருக்கின்ற வேட்பாளர்களைத்தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புங்கள் எனத்தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed