Main Menu

வாழைச்சேனையில் இடம்பெற்ற ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
இலங்கையிலுள்ள முஸ்லீம்கள் இன்று சனிக்கிழமை (01.08.2020) தியாகத்திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

பெருநாளைக்கொண்டாடும் முஸ்லீம்கள் பெருநாள் தொழுகையில் இன்று காலை ஈடுபட்டனர். அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதி முஸ்லீம் பிரதேசங்களில் பெருநாள் தொழுகைகள் பள்ளிவாயல்களிலும் திறந்த வெளியிலும் இடம்பெற்றன.

இதனடிப்படையில் வாழைச்சேனைப் பிரதேசத்தில் பெருநாள் தொழுகையும் பெருநாள் குத்பா பேருரையும் ஹைராத் பள்ளிவாயலில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விருவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி நடாத்தி வைத்தார்.

இதன் போது நாட்டு மக்களுக்காகவும் அரசாங்கத்திற்கும் நல்லாசி வேண்டியும் கொரோனா நோயிலிருந்து உலக மக்களைப் பாதுகாக்குமாறும் வேண்டி துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed