Main Menu

ஓட்டமாவடிப் பிரதேசத்தில் 08 பேர் டெங்கினால் பாதிப்பு

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புத்தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில், கடந்த ஜூலை 18 ஆந்திகதி தொடக்கம் 24 ஆந்திகதி வரையும் 12 பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 08 டெங்கு நோயாளர்களும், ஏறாவூர், கோறளைப்பத்தி மத்தி, மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 01 நோயாளர்களுமாக மொத்தம் 12 பேர் மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வாகரை, வாழைச்சேனை, செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி மற்றும் கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப்பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மேலும், கடந்த சில மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்தவொரு மரணங்களும் பதிவாகவில்லையென Dr. வே.குணராஜசேகரம் தெரிவித்தார். மொத்தமாக கடந்த வாரம் 12 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயமுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஓட்டமாவடி பிரதேச மக்கள் சற்று விழிப்புடன் செயற்பட்டு வீடுகளில் தேங்கிக் கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடங்கொடுக்காத வகையில், துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்குப் பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed