Main Menu

100,000 வேலைவாய்ப்புத்திட்ட ஆரம்பக்கூட்டம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனையில் நாட்டைக்கட்டியெழுப்பும் பல்நோக்கு அபிவிருத்திச் செயலணி திணைக்களத்தின் கீழ் 100,000 வேலைவாய்ப்புத்திட்டம் தொடர்பான பிரதேச மட்டச்செயற்குழுவின் ஆரம்பக்கூட்டம் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், உதவிப்பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா, நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித், நைட்டா நிலைய மாவட்டப்பயிற்சி உத்தியோகத்தர் கே.எல்.சகரீயா, நாவிதன்வெளி பிரதேச நைட்டா நிலையப் பொறுப்பதிகாரி ஏ.சி.சாஜஹான் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட திணைக்களத் தலைவர்களும் பங்குபற்றினர்.

மேலும், இவ்வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 34 பயிற்சிநெறிகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான இடங்கள், பயிற்சி வழங்குவதற்கான வளவாளர்கள், தொழிலின் போது பயிற்சி போன்ற விடயங்கள் பிரதேச செயலாளரினால் கலந்துரையாடப்பட்டது.

முதலாங்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான 6 மாத காலப்பயிற்சிநெறியில் இரு வாரங்கள் தலைமைத்துவப்பயிற்சி வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed