Main Menu

துப்பாக்கியுடன் கைதான தேசிய காங்கிரஸ் ஆதரவாளருக்கு விளக்கமறியல்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
றிப்பிட்டர் ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததாக கைதான சந்தேக நபரை 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் பிரசார நடவடிக்கைக்காக வந்திருந்த தேசிய காங்கிரஸ் அணியின் வாகனமொன்றில் கடந்த 30ம் திகதி மாலை பாயொன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் றிப்பிட்டர் ரக துப்பாக்கியொன்று 6 தோட்டாக்களுடன் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த துப்பாக்கியை பிரசாரக்கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸார் மீட்டதுடன், துப்பாக்கியை எடுத்து வந்து குறித்த கட்சிக்குச் சொந்தமான வாகனமொன்றில் மறைத்து வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 37 வயதான இறக்காமம் பகுதியைச் சேர்ந்தவரை கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed