Main Menu

நாம் எந்த அரசியல் கட்சிகளுக்கோ, சுயேட்சைக்குழுக்களுக்கோ எதிரானவர்களல்லர்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைக்குழுக்களுக்கு எதிரானவர்களல்லர் எனவும், எமது பெயரை களங்கப்படுத்தி அரசியல் இலாபங்களைத்தேட வேண்டாமென அரச மருத்துவ மாணவர் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.முஹமட் நாஸீக் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சில அரசியல் கட்சிகள் தமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி வாக்குச்சேகரிப்பது தொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று (2) மதியம் அம்பாறை கல்முனைப் பகுதியில் இடம்பெற்ற போது, மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்,
அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சில அரசியல் தரப்புகள் மக்களைத்திசை திருப்ப முயல்கின்றன. நாங்கள் எந்தவொரு கட்சிக்கோ சுயேட்சைக்குழுக்கோ அல்லதுஅரசியல் பிரபல்யத்திற்கோ அல்லது ஆதரவாளர்களுக்கோ எதிரானவர்களல்லர்.

தென் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள தென் கிழக்கு பட்டதாரிகள் மாணவர் அமைப்பு, அம்பாறை மாவட்ட பட்டதாரி மாணவர் ஒன்றியம் ஆகிய இரு அமைப்புகளும் தற்போது வெளிப்படுத்தியுள்ள இனவாதம் மற்றும் பிரதேசவாதத்தைத் தூண்டும் சுவரொட்டிகள், பதாதைகள் ஆகியவற்றிற்கும் எமக்கும் எதுவிதத்தொடர்பும் இல்லை. எனவே, வாக்களிப்பது நம் ஒவ்வொருவரதும் உரிமை மட்டுமல்லாது, மக்கள் அதனைச்சரிவர உணர்ந்து செயற்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றோம் எனக்குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed