Main Menu

மருதமுனையில் “வாழ்வில் உளநலம்” நூல் வெளியீட்டு நிகழ்வு

இந்த செய்தியைப் பகிர்க >>>

(றாசிக் நபாயிஸ்)
மருதமுனையைச்சேர்ந்த கலாநிதி எம்.முஹம்மட் பைறோஸ் எழுதிய “வாழ்வில் உளநலம்” நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (2020/08/02ம் திகதி) மருதமுனை ஹிதாயா சுற்றுவட்ட திறந்த வெளியில் கிழக்குப் பல்கலைக்கழக அரபுத்துறைத்தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ஜெலீல் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டச்செயலக மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி அப்துல் லத்தீப், கௌரவ அதிதியாக இலங்கை தென் கிழக்குப்பல்கலைக்கழக கலை, கலாசாரபீட பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் போன்றோர் கலந்து கொண்டதுடன், நூல் பற்றிய ஆய்வுரையை தென் கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் நிகழ்த்தினார்.

நூலின் முதல் பிரதியை பிரதம அதிதியிடமிருந்து தொழிலதிபர் கலாநிதி ஜ.எம்.உபைத்துர் றஹ்மான் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், பல கல்வியாளர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க து.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed