Main Menu

விடை பெறும் ரணிலும் விடுதலை பெறும் முஸ்லீம் சமூகமும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பஹ்மி முஹைதீன்
இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கெதிரான போக்கினை ஐ.தே.கட்சி தொடர்ந்தும் அரங்கேற்றி வந்துள்ளது. இதற்கு ஐ.தே.கட்சி அமெரிக்கா போன்ற முதலாளித்துவ மற்றும் முஸ்லிம் விரோத இஸ்ரேலிய நாடுகளுடன் இராஜதந்திர தொடர்புகளைப் பேணுவதே காரணமாகும்.

இந்நாட்டில் ரணிலுக்கு முன்னைய ஐ.தே.கட்சி தலமைகளின் கீழ் அதிகமான முஸ்லீம் அரசியல்வாதிகள் கட்சிக்காக அர்ப்பணித்தனர்.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் ரணில் தலைமைத்துவத்தைப் பெறுவதற்கு முன்னர் அதிகமான முஸ்லீம் தலைமைகள் ஐ.தே.கட்சியில் இருந்தனர். ரணிலின் இரட்டை வேடப்போக்குகளால் முஸ்லீம்கள் மட்டுமல்ல, அதிகமான முஸ்லீம் தலைமைகளும் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.

குறிப்பாக, 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லீம்கள் அடிமைகளாக்கப்பட்டனர். ஜே.ஆர்.ஐயவர்தனவின் இந்த துரோகத்தனமே விடுதலைப்புலிகள் முஸ்லீம்களை இனச்சுத்திகரிப்புச் செய்யவும், அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கவும் அடிகோளாகியது.

ரணிலின் முக்கிய பங்களிப்புடன் செய்யப்பட்ட நேர்வேயுடனான யுத்த நிறுத்தம்.இதில் முஸ்லீம்கள் சிறு குழுக்கள் என அடையாளமிடப்பட்டனர். இந்த நேர்வேயின் முக்கிய நிகழ்ச்சி நிரலுக்கு ரணில் கைப்பொம்மையானார்.

இதன் போது, பிக்குகள் சங்கத்தை வைத்திருந்த ஞானதார தேரருக்கு ஐ.தே.கட்சி கோட்டை அமைப்பாளர் லால்காந்த லக்திலக மூலம் நெருக்கம் அதிகமானது.

லால்காந்த அமெரிக்க தொண்டு நிறுவனத்தை நடாத்தி அமெரிக்காவில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்டவர். தற்போது ஐனாதிபதி ஆலோசகராகவுள்ளார். இதற்காக தனது வலது கையாக இருந்த நபரை வடமேல் மாகாண சபைத்தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட வைத்தார்.

மேலும், 2010ம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் பொது வேட்பாளராக சரத் பொன்சேக்காவை ஆதரிக்க ஐ.தே.கட்சி சார்பான பேச்சுவார்த்தையில் ஞானசார தேரர் முக்கிய பங்கு வகித்தார். இதற்காக சரத் பொன்சேகாவிற்காக முதல் பூஜையை இராஜகிரியவில் ஞானசார தேரரே நடாத்தினார்.

தூரதிஷ்டவசமாக ஆட்சி மஹிந்தவிடம் கைமாறியதால், ரணில் தனிமையானார். இருந்தும், மஹிந்தவிற்கு 2009 வரையில் நேர்வேயுடனான செயற்பாடுகளுக்கு ரணில் உதவியாக இருந்தார்.

இக்காலப்பகுதியிலே ஞானசார தேரருக்கு நேர்வே சர்வதேச நிதியத்தினூடாக 2011ம் ஆண்டு அமெரிக்காவிற்கான 5 வருட விசா வழங்கப்பட்டது. இதன் போது, நேர்வே நாட்டுக்குப் பயணமான தேரருக்கு ஆரம்ப வழிகாட்டல் மற்றும் நேர்வே அபிவிருத்தி நிதியத்துடனான தொடர்பை ரணில் ஏற்படுத்திக் கொடுத்தார்.

இதன்படி Arne Fjortoft ஜ சந்தித்து இன ஐக்கியம் தொடர்பான செயற்றிட்டத்திற்கு நிதியைப் பெற்றார். சில காலம் அமைதியாக இருந்தவர் திடீரென ஹலால் பிரச்சனையை கையில் தூக்கினார். இதன் மூலமே இவரது பயணம் திசை மாற்றம் கண்டது.

இது தொடர்பில் ரணில் 2012 பாராளுமன்றத்தில் நியாயப்படுத்தியே பேசினார். முஸ்லீம்களைக் கௌரவப்படுத்தியோ, சார்பாகவோ பேசவில்லை. அதாவது ஐம்இய்யத்துல் உலமா சபை வழங்கும் ஹலால் சான்றிதழ் நிறுத்தப்பட வேண்டுமென்றார். இதற்கான உந்துதலை ஞானசார தேரே வழங்கினார்.

அது மட்டுமல்ல, ரணிலின் தாயார் திருமதி நளினி விக்ரமசிங்க (Nalini Wickramasingha) சுகவீனமுற்ற வேளை, அவரின் வீட்டில் நடந்த விசேட பூஜையை நடாத்தியவர் இந்த ஞானசார தேரர். இருந்தும், கோத்தபயாவின் ஆளுமைக்குள் ஞானசார உள்வாங்கப்பட்டமை இன்னொரு சுவாரஷ்யமான விடயமாகும்.

இந்நிலையில், நேர்வே, அமெரிக்க உறவுகளைத்துண்டித்து சீனா, இந்திய உறவுகளை மஹிந்த முன்னிலைப்படுத்தினார். இப்பின்புலத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.

மேற்கத்திய இடம்பெயர் தமிழ் அமைப்புகள், நோர்வே உட்பட பல நாடுகள் இலங்கைக்ககெதிராக விரல் நீட்டியது. இந்நிலையில், ரணில்+தமிழ் தேசியக்கூட்டமைப்பு + புலம்பெயர் வெளிநாடுகளின் கூட்டு உருவானது. இவர்களுக்கு நாட்டில் ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது.

இதற்காக கோத்தபயாவுடன் நெருக்கமாகிய ஞானசாரவை நோர்வேயினூடாக ரணில் இயக்க ஆரம்பித்தார். இதன் மூலம் நாட்டில் இனமுரண்பாடுகள் உருவானது. மொத்த தமிழ் மற்றும் முஸ்லீம்களின் எதிரியாக மஹிந்த சித்தரிக்கப்பட்டார். ராஜித மூலமாக பேரம் பேச்சு உருவானது. இதன் மூலம் மைத்திரியூடாக ஆட்சி மாற்றம் வந்தது.

இது காலவரையில், ஞானசாரவின் எந்த நடவடிக்கையையும் ரணில் விமர்சித்ததோ அல்லது முஸ்லீம்களுக்கெதிரான இவரின் செயற்பாட்டை பகிரங்கமாக விமர்சிக்கவோ இல்லை.

நல்லாட்சியில் பல மாதங்களாக ஞானசாரவை இராஜகிரியவில் சம்பிக்க ரணவக்கவின் பாதுகாப்பில் ரணில் வைத்திருந்தார். இதன் மூலம் நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்கினார். தற்போது ஞானசாரவிற்கு முழுப்பாதுகாப்பும் வழங்கி தேவையான போது பயன்படுத்த அமைதியாக்கினார்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக டான் பிரசாத்தை வெள்ளோட்டம் விட்டுப்பார்த்தார். இந்த டான் பிரசாத்திற்கு அரசாங்கத்தின் இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டதோடு, கொழும்பில் இவருக்கான தங்குமிட வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இவர் உட்பட இவரின் தீவிர இனவாதப்போக்குடைய 12 சகாக்கள் தற்போதைய உள்ளூராட்சித்தேர்தலில் போட்டியிட்டனர். இனவாதத்தை பகிரங்கமாகப்பேசி, முஸ்லீம்களைத் தாக்குகின்ற இவர்களை சிறையில் அடைக்காமல், ரணில் அடைக்கலம் வழங்கினார்.

இஸ்ரேல், அமெரிக்க மற்றும் சியோனிஷ கொள்கைகளை முதன்மைப்படுத்தி ஆலோசகர்களால் உருவானதே ரணிலின் அரசியலமைப்பு நகல்வரைவு. இதிலும் முஸ்லீம்கள் தொடர்பில் எதுவித பாதுகாப்போ, உத்தரவாதமோ கிடையாது. மேலதிகமாக வடகிழக்கு இணைப்பிற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி ஆட்சியில் முஸ்லீம்களின் காணிப்பிரச்சனை, மீள்குடியேற்றம் மற்றும் உரிமைசார்ந்த எந்த விடயத்தையும் ரணில் தீர்க்கவில்லை. மாறாக, TNA கட்சியை அருகில் வைத்து முஸ்லீம் – தமிழ் உறவுகளை சீரழித்தார்.

அத்துடன், மஹிந்த ஆட்சியை விட 86 அதிகமான சம்பவங்கள் ரணில் ஆட்சியில் நடந்தது. பொலிஸ், சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களை தன்வசம் வைத்திருந்து மைத்திரி மேல் பழிசுமத்தி குளிர்காய்ந்தார்.

ஆகவே, ஹக்கீம் மற்றும் சம்பந்தன் போன்றவர்களை தலையாட்டும் பொம்மைகளாக்கி வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சியிலே ரணில் ஆடினர். இந்த முஸ்லீம் சமூகத்தின் விரோதப்போக்கினை மேற்கொள்ளும் ஐ.தே.கட்சி இன்று வடகிழக்கு முஸ்லீம்களிடத்தில் மட்டுமல்ல, தேசிய ரீதியில் தூக்கி வீசப்பட்டுள்ளது.

ஆகவே, ஹக்கீம், றிசாத் இருக்கின்ற வரை மீண்டும் ஐ.தே.கட்சியை அல்லது அதனது பலத்தை கிழக்கில் காலூண்ட வைக்கலாமென்ற பகற்கனவில் சஜித் உள்ளார்.

ஏப்ரல் தாக்குதல் என்ற நாடகத்தின் மூலம் சிங்கள மக்களிடம் கதாநாயகனாக முயற்சித்தார். SLPP கட்சி 10.02.2018 உள்ளூராட்சித்தேர்தலில் பாரிய வெற்றியைக் கண்டது. இதனால் அதனது சிங்கள வாக்கு வங்கியை அதிகரிக்க ஏப்ரல் தாக்குதல் மூலம்:

1-முஸ்லீம்களைப் பயங்கரவாதிகளாக முத்திரையிட்டது.

2- றிசாத், ஹக்கீமை ஊழல், தற்கொலைத்தாக்குதல் மற்றும் அமைச்சு ஊழலில் சிக்க வைத்தது.

3- ஹிஸ்புள்ளாவின் ஆளுநர் பதவிக்கெதிராக தமிழர்களைத்தூண்டி, பல்கலைக்கழக விடயத்தைப் பூதாகரமாக்கியது.

4-பாராளுமன்ற ஆணைக்குழுவை நியமித்து முஸ்லிம்களுக்கெதிராக 10 அம்ச அறிக்கையை அமெரிக்க நிதியில் தயாரித்தது.

தற்போது மக்கள் சக்தி என்ற பெயரில் சஜித், சம்பிக்க கூட்டணியிடம் முஸ்லீம் அரசியல் சரணகதியாக உள்ளது. கடந்த தேர்தலில் 15 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம் வாக்குகள் 5 இலட்சம் தமிழ் வாக்குகள் மூலம் SLMC, ACMC & மனோ அணி மூலம் தேசியப்பட்டியலை பெற்றும் இறுதியில் ஏமாற்றியுள்ளனர். இதன் மூலம் சிங்கள மக்களிடம் முஸ்லீம் தமிழ்த்தரப்புக்கு தான் அடிமையில்லை என்ற முதல் படத்தை ஓடியுள்ளார்.

அடுத்து, சம்பிக்கவை அடுத்த தேர்தலுக்கு பிரதமராக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக சம்பிக்க மூலமாக சிங்கள மக்களிடம் ஹீரோவாக பல திட்டங்களை அரங்கேற்றவுள்ளார். இந்த சம்பிக்க தான் மஹிந்த அரசில் சிங்கள கடும்போக்காளர்களைத் தயார்படுத்தியவர்.

ஆகவே, முஸ்லீம் தலைமைகள் சஜித் தலைமைகள் எதிர்க்கட்சியிலிருந்து தலையாட்டும் பொம்மைகளாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்.

காரணம் தமிழ், முஸ்லீம் மக்களிடம் பாதுகாவலனாகவும், சிங்கள மக்களிடம் தேசபிதாவாகவும் 5 வருடத்தை சஜித் கடக்க வேண்டும். இதில் முஸ்லீம்களை மஹிந்த தரப்புடன் எதிரியாக வைத்திருப்பதே கனவாகும்.

இன்று ரணில் தனக்குப்பிறகு ஐ.தே.கட்சி உயிர் வாழக்கூடாது. முஸ்லீம் தலைமைகளும் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கக்கூடாதென்ற நிலையை உருவாக்கி விடைபெறுகிறார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed