Main Menu

“காலம் செய்த கோலம்” தொடர் 3 -றிஹானா றஸீம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

“காலம் செய்த கோலம்”  தொடர் 3

ஸாறாவும், அன்வரும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் கண்கலங்கி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“என்னங்க நம்ம பையன அல்லாஹ்க்குப் பொருந்திக்கொள்ளும் வகையிலும் நல்ல ஸாலிஹான, சமத்துவமான பிள்ளையா வளர்க்கனும்.

“ஆமா ஸாறா நீங்க சொல்றது சரிதான். பெத்தவங்கட ஆசையில இதுவும் ஒன்று தான்” இப்படி இருவரும் தங்களது உணர்வுகளைப் பரிமாறிக்கொண்டார்கள்.

இப்படி நாட்களும், காலங்களும் வெகு விரைவாகவே ஓடின.

மாலை நேரம் ஸாறா தன் கணவர் அன்வரிடம் மனதிலிருந்த ஆசைகளையெல்லாம் கூற எத்தனிக்கிறாள்.

“என்னங்க என்னால தான் வைத்தியராக முடியவில்லை. நான் படித்தும் என்னை நம்பிய சமூகத்திற்கும் என்னால எதுவுமே செய்ய இயலவில்லை.

நான் என்னுடைய இலட்சியத்தை நினைத்து அழாத நாளே இல்லை. ஆனா நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன்.

என்னால முடியாத கனவுகளையும், இலட்சியத்தையும் நம்ம மகன் மூலம் நான் சாதிக்க நினைக்கிறேன்.

இன்றிலிருந்து என்னுடைய கனவெல்லாம் நம்ம பையன நல்ல படிக்க வைக்கிறது தான்” என்று கண்ணை மூடிக்கொண்டு மூச்சு விடாமல் பேசி முடித்தாள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அன்வர் ஸாறாவைப்பார்த்து,

“நீ கண்கலங்கிய காலம் போதும்
இனி எல்லாமே உனக்கு வசந்த காலம் தான். உன் இலட்சியத்திற்குப் பின்னால் நானும், நம்ம மகன் சிங்கக்குட்டியும் இருப்போம். நீ எதையும் நினைத்து வருத்தப்படாதே” என்று கூறிக்கொண்டே அறைக்குள் நுழைந்து உடையை மாற்றி விட்டு வெளியே வந்தான் அன்வர்.

ஸாறாவைப்பார்த்து, மகனுக்கு வகுப்பு முடிந்திருக்கும் கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ஸாறாவும் மகன் வருவான் என்று வாசற்படியில் ஏதோ ஆழ்ந்த சிந்தனைகளுக்குள் மூழ்கிக்கிடந்தாள்.

“உம்மா உம்மா ” என்று ஸான் கூப்பிட்டது கூட கேட்காதவளாய் ஏதோ பிரம்மிப்பில் இருந்தாள்.

“என்னம்மா..?
நான் இவ்வளவு நேரம் கூப்பிட்டன் நீங்க பேசாம இருக்கிறீங்க”

உடனே நினைவுக்கு வந்த ஸாரா
“செல்லம் வந்துட்டியா..? வாப்பா எங்க…?”

“வாப்பா அவங்கட முதலாளிய பார்த்துட்டு வாரண்டு சொன்னார்”

அப்படியா…?
சரி, கண்ணா நீ முதல்ல கை, கால கழுவிட்டு வா. நான் உனக்கு சூடா “தேநீர் ” கொண்டு வாரன் என்று குசினிக்குள் நுழைந்தாள்.

ஆனால் “தேநீர் ” ஊற்றிக்கொடுக்கக்கூட எந்த சமானும் இல்லை. அல்லாஹ்வே இப்ப மகன்கிட்ட என்ன சொல்றது. பாவம் புள்ளைக்கு ரொம்ப பசியா இருக்குமோ…?

பசிக்குகூட ஒரு “தேநீர் ” ஊத்தி குடுக்க எதுவுமில்லையே.. என்று தனியாக புலம்ப ஆரம்பித்தாள்.
இந்த புலம்பல் ஸான் காதுக்கு எட்டுகிறது.

ஸான் காதில் கேட்டும் கேட்காதது போல் அமைதியாய் படிப்பதற்கு தரையில் அமர்ந்தான்.

வகுப்பில் குடுத்த வீட்டு வேலைகளை முடித்து விட்டு சற்று தரையிலே சாய்ந்து கொண்டான்.

ஸான் தனக்குள்ளே பல கேள்விகளை எழுப்புகிறான்?

“என்னுடைய பசிக்கு கூட ஒழுங்கா சாப்பிடவே முடியல்லையே. இப்படி இருக்கும் போதே அடுத்த வருடம் பதினோராம் வகுப்பு போகும் போது, நிறைய பயிற்சிப்புத்தகம் வாங்கனும். நிறைய வகுப்பு நடக்கும் இதெல்லாம் யார்கிட்ட சொல்றது?

வீட்டில இப்ப இருக்கிற நிலைய பார்த்தாலே ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன செய்யப் போறேனோ என்று தெரியல்லையே” கண் கலங்கியவனாக கண்ணை மூடிக்கொண்டான்.

(இனி நடப்பது என்ன…?)

ஸாறாவின் கனவுகள் நடக்கப்போகிறதா..? இல்லை. ஸானின் முடிவுகள் வேறு விதமாக இருக்கப்போகிறதா….?

தொடரும்…

றிஹானா றஸீம்
பஹலகம
கெகிறாவ

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed