Main Menu

மாணவர்களின் பரீட்சை அடைவினை முன்னேற்ற கோறளைப்பற்று மேற்கு கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் நடவடிக்கை

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் கல்வி அபிவிருத்திக்காக கோறளைப்பற்று மேற்கு கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்து வருகின்றது.

அதனடிப்படையில், 2020ம் ஆண்டு பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பரீட்சை அடைவினை முன்னேற்றுவதற்கான செயலட்டைகள் பிரதேச பாடசாலைகளுக்கு வழங்கும் நிகழ்வும் போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் நிகழ்வும் ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளரும் அமைப்பின் தலைவருமான வீ.ரீ.அஜ்மீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், ஓட்டமாவடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.அஹ்ஷாப், பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், கல்குடா ஸக்காத் நிதியத்தின் அங்கத்தவர்கள், கோறளைப்பற்று மேற்கு கல்வி மற்றும் சமூக அபிவிருத்திச்சபை அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

கல்குடா ஸக்காத் நிதியத்தினால் கோறளைப்பற்று மேற்கு கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்திற்கு போட்டோப்பிரதி இயந்திரமொன்றும் அன்பளிப்புச்செய்யப்பட்டது.

குறித்த போட்டோப்பிரதி இயந்திரம் கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி கோட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஓட்டமாவடி பிரதேசத்தின் தனவந்தர்களின் பங்களிப்பு மற்றும் கோறளைப்பற்று மேற்கு கல்வி அபிவிருத்திச்சபையின் அனுசரணையுடன் பிரதேச பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைப்பின் தலைவர் வீ.ரீ.அஜ்மீர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed