Main Menu

மட்டு.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனர்த்தப் பயிற்சிக்கருத்தரங்கு

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
அனர்த்தங்களிலிருந்து பொது மக்களைப்பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினுடாக மக்களை எவ்வாறு அனர்த்தங்கள் நிகழும் போது பாதுகாப்பதென்பது தொடர்பான பயிற்சிக்கருத்தரங்கு நேற்று (14) திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலாக இடம்பெற்ற இப்பயிற்சிக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கலந்து கொண்டு இக்கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது, இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நேத்ரா அலைவரிசையின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.மோசஸ், உலக வரைபட நிபுணர் எம்.சுதாகரன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் ஆகியோர் விரிவுரைகளை நடாத்தினர்.

அனர்த்தங்கள் இயற்கையாகவும் செயற்கையாகவும் அதாவது மனிதர்களாலும் ஏற்படுவதற்கான அதிகளவு வாய்ப்புக்களுள்ள வேளைகளில், ஊடகவியலாளர்கள் எவ்வாறு மக்களுக்குச் செய்திகளை வழங்குவது தொடர்பாக பிராந்திய ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

மேலும், இடர் காலங்களில் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் ஏனைய மக்களையும் அனர்த்தங்களிலிருந்து எவ்வேளையும் விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருப்பதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களும் பத்திரிகைத்துறையினரும் உதவியாக இருப்பது அவசியமானதெனவும் இங்கு வளவாளர்களினால் வலியுறுத்தப்பட்டது.

இதன் போது, மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed