Main Menu

காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்திற்கு காணி கையளிப்பு

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஜனாதிபதியின் கோட்டாபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டத்தின் கீழ் அரச திணைக்களங்களுக்கு காணி கையளிப்புச் செய்யும் திட்டத்திற்கமைவாக காணி அனுமதிப்பத்திரமில்லாத அரச திணைக்களங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம் அமைந்துள்ள அரச காணியை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளருக்கு அதிகார கையளிப்புச் செய்யும் நிகழ்வானது, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்ஹர் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பபு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் வைத்தியர் உமர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய அதிபர் ஏ.பி.எம்.அலியார், முன்னாள் பாடசாலை அதிபர் ஏ.ஜி.பிர்தௌஸ் உட்பட காணிக்கிளை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

காணி ஆணையாளர் அவர்களின் 2020.08.19 ஆம் திகதி அனுமதிக் கடிதத்திற்கமைவாக பாடசாலை காணிக்குரிய அனுமதிப்பத்திரம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed