Main Menu

மீராவோடையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மீராவோடை பாடசாலை முன்பாக ஹெரோயின் போதைப்பொருளுடன் 48 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மாவடிச்சேனைப் பகுதியில் வசிக்கும் நாற்பத்தியெட்டு வயதுடையவர் என்றும், அவரிடமிருந்து 170, 220 மில்லி கிராம் என 390 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் அதனோடு சிறுதொகைப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், பணம் என்பன வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed