Main Menu

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கோரி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முள்ளிவட்டுவான் பிரதேச மக்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து தருமாறு கோரி இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முள்ளிவட்டுவான் பாலர் பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட பிரதேச மக்கள் தங்கள் பிரதேசத்திற்கான பொது மயானம், விளையாட்டு மைதானம் போன்றன இல்லாமைக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு பெற்றுத்தருவதோடு, யானை வேலி அமைத்துத்தருமாறும், குடியிருப்புக் காணிகள் வன இலாகாவினால் சுவீகரித்தல் போன்றவற்றைத் தடுக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச மக்கள் கிழக்கு மாகாண ஆளுனர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், ஓட்டமாவடி பிரசே சபைத்தவிசாளர் ஆகியோருக்கான மகஜரினை ஓட்டமாவடி பிரதேச சபையின் வாகனேரி வட்டாரத்திற்கான உறுப்பினர் வைரமுத்து யோகேஸ்வரனிடம் கையளித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed